விஜயின் புது கெட்டப்பை பார்த்து வெறியான தொண்டர்கள்... தவெக இஃப்தார் நிகழ்ச்சியில் பரபரப்பு...!
இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வெள்ளை நிற லுங்கி, சட்டை மற்றும் தலையில் குல்லா அணிந்து வருகை புரிந்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான அழைப்பிதழ் ஏற்கனவே அச்சிடப்பட்டு, முக்கிய இஸ்லாமிய இயக்கங்களைச் சேர்ந்தவர்களுக்கு அழைப்பு வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி தமிழக வெற்றிக் கழகத்தின் 120 அமைப்பு மாவட்டங்களில் நோன்பு இருக்கக்கூடிய இஸ்லாமியர்கள் மாவட்டத்திற்கு 5 பேர் வீதம் அழைக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக இந்நிகழ்ச்சியில் 3000 பேர் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக 3500 பேருக்கு சுடச்சுட மட்டன் பிரியாணி, மட்டன் நோன்பு கஞ்சி, சிக்கன் 65 உள்ளிட்ட உணவு வகைகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றாலும், எக்காரணம் கொண்டு இப்தார் நோன்பு நிகழ்ச்சிக்கு எந்த அரசியல் சாயமும் பூசக்கூடாது என்றும், கட்சித் துண்டுகள் பேட்சகள் போன்றவற்றை அணிந்து வர வேண்டாம் என்றும் விஜய் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: முழு இஸ்லாமியராகவே மாறிட்டாரே... தலையில் குல்லா, வெள்ளை லுங்கி சட்டையில் மாஸ் என்ட்ரி கொடுத்த விஜய்...!
இதனிடையே, தவெக தலைவர் விஜய் வருகை புரிவதால் இன்று மதியம் முதலே ஒய்எம்சிஏ மைதானம் அருகே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிய ஆரம்பித்தனர். காலை முதலே விஜயை பார்ப்பதற்காக குவிந்திருந்த ரசிகர்கள், சற்று முன் அவர் உள்ளே வருவதைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வெள்ளை நிற லுங்கி, சட்டை மற்றும் தலையில் குல்லா அணிந்து வருகை புரிந்தார். அவரைப் பார்த்ததும் வெளியே இருந்த ரசிகர்கள் தடுப்புகளை எல்லாம் உடைத்து எரிந்துவிட்டு அருகே செல்ல முயன்றனர். இதனால் அப்பகுதியில் மிகப்பெரிய தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட பவுன்சர்களாலும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது. இதனால் ஒய்எம்சிஏ அரங்கத்தின் கண்ணாடி உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: தவெக நோன்பு திறக்கும் நிகழ்ச்சி... சுடசுட தயாராகும் உணவு வகைகள்... ஏற்பாடுகள் என்னென்ன?