இந்தியாவின் மகள் நீலா ராஜேந்திராவை தூக்கி எறிந்த டிரம்ப்..! நாசாவில் சர்ச்சை..!
2021 ஆம் ஆண்டில், நீலா நாசாவில் தலைமை பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்க அதிகாரியாகப் பணியாற்றத் தொடங்கினார்.
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் (DEI) துறையின் தலைவர் நீலா ராஜேந்திரா பணி நீக்கப்பட்டுள்ளார். நீலா ராஜேந்திரா இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு அமெரிக்க குடிமகள். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், எலோன் மஸ்க் ஆகியோரால் எதிர்ப்பு எழுந்த நிலையில், அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
DEI என்பது பணியிடங்கள், நிறுவனங்களில் வெவ்வேறு பின்னணியைச் சேர்ந்தவர்களுக்கு உள்ளடக்கம் மற்றும் சம வாய்ப்புகளை உறுதி செய்யும் ஒரு கொள்கை அமைப்பு. ஆனால் இந்த முயற்சிகள் நியாயமற்ற நடைமுறைகளை ஊக்குவிப்பதாக டிரம்பும், மஸ்கும் நம்புகின்றனர். அனைத்து அரசு நிறுவனங்களிலும் DEI திட்டங்களை தடை செய்த டிரம்ப் நிர்வாக உத்தரவைத் தொடர்ந்து, மார்ச் மாதத்தில் நாசா அதன் பன்முகத்தன்மை பிரிவை மூடியது.
முன்னதாக 2024 ஆம் ஆண்டில், நாசாவின் சுமார் 900 DEI ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அந்த நேரத்தில் ராஜேந்திரா தனது வேலையை காப்பாற்றிக் கொள்வதில் வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது. நீலா ராஜேந்திரா நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தில் DEI அதிகாரியாக இருந்தார். பணியாளர்களில் பன்முகத்தன்மையை அதிகரிக்கும் பணியை மேற்கொண்டார். பெண்கள், சிறுபான்மையினரை ஆட்சேர்ப்பு செய்வதில் கவனம் செலுத்தும் 'விண்வெளிப் பணியாளர் படை 2030' போன்ற முயற்சிகளை அவர் மேற்கொண்டார்.
இதையும் படிங்க: கூடுதல் சம்பளம் தரும் டொனால்ட் டிரம்ப்? சுனிதா வில்லியம்ஸ், வில்மோருக்கு எவ்வளவு கிடைக்கும்?
டிரம்பின் நிர்வாக உத்தரவைத் தொடர்ந்து, அவரது வேலையைக் காப்பாற்ற நாசா அவரது பதவியின் பெயரை மாற்றியது. பின்னர் அவரது பதவி 'குழு சிறப்பு, பணியாளர் வெற்றி அலுவலகத் தலைவர்' என்று மாற்றப்பட்டது. அவரது புதிய பணியில், ஆய்வகத்தில் உள்ள 'பிளாக் எக்ஸலன்ஸ் ஸ்ட்ராடஜிக் டீம்' போன்ற குழுக்களை அவர் மேற்பார்வையிடுவார் என்று ஆய்வக ஊழியர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், அவரது பொறுப்புகள் முன்பு போலவே இருந்தன. பதவி மாற்றத்திற்குப் பிறகு, ராஜேந்திரா தனது லிங்கிடு இன் சுயவிவரத்தைப் புதுப்பித்தார்.
சமீபத்தில், நீலா ராஜேந்திரா இனி நாசா ஆய்வகத்தில் வேலை செய்யவில்லை என்பதை உள் மின்னஞ்சல் வெளிப்படுத்தியது. நீலா ராஜேந்திரா வட கரோலினா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல், இசையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அவர் 2008 ஆம் ஆண்டு வேக் ஃபாரஸ்ட் பல்கலைக்கழக வணிகப் பள்ளியில் எம்.பி.ஏ முடித்தார்.
தனது படிப்புக்குப் பிறகு, நீலா பல்வேறு நிறுவனங்களில் குறுகிய காலப் பணிகளை வகித்தார். 2021 ஆம் ஆண்டில், நீலா நாசாவில் தலைமை பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்க அதிகாரியாகப் பணியாற்றத் தொடங்கினார்.
இதையும் படிங்க: செவ்வாய் கிரக கதவை திறந்துவிட்ட சுனிதா வில்லியம்ஸ்... அவருக்கு தெரியாமல் நடந்த அற்புதம்...!