×
 

ஏழுமலையான் தரிசனத்திற்காக பிச்சை எடுக்கணுமா? இங்கே கோயில்களா இல்லை? தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கொந்தளிப்பு..

திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்காக தெலுங்கானா மக்கள் ஆந்திர அதிகாரிகளிடம் பிச்சை எடுக்க வேண்டியது அவசியமா? என முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி காரசாரமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சிபாரிசு கடிதங்கள் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இதற்கு தெலுங்கானா மாநில அரசியல் பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ரவீந்திர பாரதியில் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுருந்த கொலுவுலா விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பங்கேற்றார்.

இதில் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பேசுகையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு தெலுங்கானா மக்கள் பிரதிநிதிகள் சிபாரிசு கடிதங்களை ஏற்க வேண்டும்? என எதற்காக ஒவ்வொரு முறையும் தேவஸ்தான அதிகாரிகளிடமும் ஆந்திர அரசிடமும் ஒவ்வொரு முறையும்  கேட்பதில் என்ன பயன் ? வாரத்தில் இரண்டு நாட்கள் என அவர்கள் கொடுக்கும் பிச்சை எதற்கு.? 

ஆந்திராவில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ( TTD ) இருந்தால், தெலுங்கானாவில் யாதகிரிகுட்டா தேவஸ்தானம் ( YTD ) இல்லையா ?  பத்ராசலத்தில் ராமர் கோயில் இல்லையா?  மாநிலத்தில் சிவன் கோயில்கள் எண்ணிக்கை என்ன குறைவாகவா உள்ளது. அற்புதமான கலாச்சார பாரம்பரியம் கொண்ட தெலங்கானாவில் உள்ள கோயில்களை விட்டு திருமலைக்குச் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்ய பிச்சை எடுப்பதற்குப் பதிலாக, தெலுங்கானாவில் உள்ள கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்ய வேண்டும் என்றார்.  

இதையும் படிங்க: திருப்பதியில் மூச்சு திணறி மயங்கிய சிறுவன்.. 3 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு உயிரிழந்ததாக அறிவிப்பு.. ..

முன்னதாக இதே நாளில் இன்று ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று தனது குடும்பத்தினருடன் திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு சென்றார்.  ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பேரனும் அமைச்சர் நாரா லோகேஷ் மகனுமான தேவான்ஸ் பிறந்தநாளை ஒட்டி இன்று குடும்பத்தினருடன் ஏழுமலையான் கோவிலில் சுவாமி சந்திரபாபு குடும்பத்தினர் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோயிலுக்கு உள்ளே உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் வேத பண்டிதர்கள் வேத ஆசீர்வாதம் செய்து வைத்து தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். 

இதனை அடுத்து தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி ஆர் நாயுடு, செயல் அதிகாரி ஷியாமலா ராவ், கூடுதல் செயல் அதிகாரி வெங்கைய்யா சௌத்ரி ஆகியோர் இணைந்து இந்த ஆண்டுக்கான டைரி காலண்டர் பஞ்சாங்கம் உள்ளிட்டவை வழங்கினர். இதனை அடுத்து முதல்வர் குடும்பத்தினர் திருமலையில் உள்ள தரிகொண்ட வெங்கமாம்பா அன்னப்பிரசாத கூடத்தில் பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் பரிமாறி அங்கு பரிமாறப்படும் உணவுகள் தரம் குறித்து கேட்டிருந்தனர். இதனை அடுத்து அங்கேயே உணவு சாப்பிட்டனர். ஆந்திரா முதலமைச்சர் திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு சென்ற அதேநாளில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இவ்வாறு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: திருப்பதி கோயிலில் தகராறு! கொதித்தெழுந்த அறங்காவலர் குழு உறுப்பினர்..! அதிகாரத்தில் இருந்தா என்ன வேணும்னாலும் பேசுவியா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share