×
 

இந்து கோயில் உண்டியலில் காசு... நீ சட்டம் போடுவியா மோடி? இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக சு.வெ சுளீர்..!

5 ஆண்டுகளாக இந்துக்களாக இருப்பவர்கள் மட்டும் தான் கோயில் உண்டியலில் பணம் போட முடியும் என நீ சட்டம் கொண்டு வருவாயா?

வக்ஃபு சட்டத்தை திரும்பப்பெறக்கோரி மதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுிய எம்.பி, சு,வெங்கடேசன் பேசும்போது, ''வஃக்புக்கு தானம் கொடுக்கலாம், யாரும் கொடுக்கலாம். அது மதத்திற்கு கொடுப்பதல்ல. இறைவனுக்கு கொடுப்பது. மதம்தான் மனிதனுக்கு வேறு வேறு. இறை நம்பிக்கை என்பது அனைவருக்கும் ஒன்று. அவர்கள் எந்த இறைவனுக்கு கொடுக்கிறார்களோ அந்த இறைவனுக்கு நாமும் கொடுப்போம். ஆனால் அப்படி கொடை கொடுப்பவர்கள் வக்ஃபுக்கு கொடை கொடுக்க வேண்டும் என்றால்  5 ஆண்டுகள் இஸ்லாமியராக இருக்க வேண்டும் என்கிற சட்டத் திருத்தம். என்ன அநியாயம் இது? 


இதோ இருக்கிறது பிள்ளையார் கோயில். போகிற போக்கில் சாமியை கும்பிட்டு உண்டியலில்ாசு போட்டு போகிறோம். அப்படியானால் 5 ஆண்டுகளாக இந்துக்களாக இருப்பவர்கள் மட்டும் தான் கோயில் உண்டியலில் பணம் போட முடியும் என நீ சட்டம் கொண்டு வருவாயா? இந்தக் கேள்வி உண்மையாக இருக்கிறதா இல்லையா? இந்தக் கேள்வியில் நியாயம் இருக்கிறதா இல்லையா? அது மதம் சம்பந்தப்பட்டதல்ல, அது இறை நம்பிக்கை சம்பந்தப்பட்டது.

இதையும் படிங்க: பாஜகவில் தேசிய தலைவராகிறார் அண்ணாமலை... அமித் ஷா- மோடி கொடுக்கும் ஜாக்பாட்..!

எனக்கு என்ன இறைவன் ரட்சிக்கிறான் என்று மனிதன் நினைக்கிறானோ அந்த இறைவனுக்கு எதையும் கொடுப்பான். அது அவனவனுடைய இறை நம்பிக்கை, மத நம்பிக்கை, மத உரிமை, அரசியல் சாசன சட்டம் வரைந்திருக்கிற உரிமை. வக்ஃபுக்கு நன்கொடை கொடுக்க 5 ஆண்டுகள் இஸ்லாமியர்களாக இருக்க வேண்டும் என சட்டத்திருத்தம் கொண்டு வந்திருப்பதைப் போல இந்திய வரலாற்றில் இதுவரை கிடையாது.

 

மோடி அவர்களே, நாங்கள் திருப்பிக் கேட்கிறோம்? பாஜகவிற்கு நன்கொடை கொடுக்கிற ஒருவர் பாஜகவின் உறுப்பினராக 5 ஆண்டுகள் இருந்தால் தான் நன்கொடை பெற முடியும் என்று நீ உன் கட்சிக்கு சட்டத்தை திருத்தம் கொண்டு வருவாயா? அதுகூட வேண்டாமே... ரெய்டு நடத்தப்படும் நிறுவனங்களில் 5 ஆண்டுகளுக்கு பாஜக நிதி பெறாது எனச் சொல்ல முடியுமா? சொன்னால் அவன் கஜானாவே காலி'' எனதெரிவித்தார்.  

இதையும் படிங்க: கச்சத்தீவு பற்றி ஒரு வார்த்தை கூட பேசல..! பிரதமரை கிழித்த செல்வப்பெருந்தகை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share