×
 

காவலர் தாய் கொலை வழக்கில் திருப்பம்.. நகைக்காக கொன்ற பெண்.. 2 மாத குழந்தையின் தாய் செய்த கொடூரம்..!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே காவலரின் தாயார் கொலை செய்யப்பட்ட வழக்கில் 24 வயதான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள திருப்பனை சிஎஸ்ஐ கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெயபால் மனைவி வசந்தா (வயது 70). ஓய்வு பெற்ற அங்கன்வாடி பணியாளர். தம்பதியினருக்கு சபிதா என்ற மகளும் வினோத்,  விக்ராந்த் என்ற மகன்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.  

சபிதா, வினோத் கோயம்புத்தூரிலும், போலீஸ்காரரான விக்ராந்த் சாத்தான்குளம் டிஎஸ்பி அலுவலகத்தில் வேலை பார்த்து வருவதுடன் குடும்பத்துடன் அருகேயுள்ள ஆனந்தபுரத்தில் வசித்து வருகிறார். சொந்த கிராமத்திலேயே வசித்து வரும் வசந்தா, வழக்கமாக மாலை நேரங்களில் அருகிலுள்ள வீடுகளில் அமர்ந்து பேசுவது வழக்கம். ஆனால் நேற்று வீட்டை விட்டு வெளியே வரவில்லை. 

இதனையடுத்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவரது வீட்டிற்கு சென்று பார்க்கும் போது வழக்கத்திற்கு மாறாக வீட்டின் ஜன்னல்கள் கதவுகள் பூட்டப்பட்டு கிடந்ததுள்ளது. இதனை அடுத்து அவரது மகனான போலீஸ்காரர் விக்ராந்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர் தாயின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதனையடுத்து அவரது உறவுக்கார பையன் ஒருவனிடம் ஆனந்தபுரத்தில் உள்ள தனது வீட்டில் சாவியை வாங்கி வந்து திறந்து பார்க்கும் படி கூறியுள்ளார். அப்போது வீட்டின் கதவுகள் உள்பக்கம் பூட்டி இருந்த நிலையிலிருந்து உள்ளது. இதனால் திறக்க முடியாத நிலையில் வீட்டில் பின் பக்கமாக சென்று பார்த்தபோது கதவு திறந்து நிலையில் கிடந்துள்ளது. வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது வசந்தா இறந்த நிலையில் கிடந்துள்ளார். 

இதையும் படிங்க: கல்குவாரியால் கதறும் தூத்துக்குடி மக்கள்.. அலட்சியம் காட்டும் கனிமவள அதிகாரி..!

மகன் விக்கிராந்துக்கு  தகவல் கிடைக்கப்பெற்று பார்க்கும்போது அவர் அணிந்திருந்த ஏழு பவுன் தங்கச் செயின் அறுத்து எடுக்கப்பட்ட நிலையில் கம்மல்களை கழற்றி  எடுத்து சென்றுள்ளனர். இது குறித்து மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். மாவட்ட எஸ்பி ஆல்பர்ட்ஜான் சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டார். கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் ஜியா வரவழைக்கபட்டது.

மோப்பநாய் வீட்டிலிருந்து வந்து தெருக்களில் சென்று நின்று விட்டது. தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில்  வசந்தாவை அதே பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் செல்வரதி தலையணையால் அமுக்கி கொலை செய்து சுமார் 8 சவரன் தங்க நகைகள் திருடியது தெரியவந்தது. இதையடுத்து செல்வதியை கைது செய்த மெஞ்ஞானபுரம் போலீசார் அவரிடம் இருந்து திருடப்பட்ட நகையை மீட்டு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

முதற்கட்ட விசாரணையில், வசந்தா வீட்டில் உள்ள கோழி கடந்த 10 தினங்களுக்கு முன்பு திருடு போயுள்ளது. இரண்டு தினங்களுக்கு முன்பு எலுமிச்சை பழங்கள் திருடுபோயுள்ளது. இதையடுத்து வசந்தா அருகில் வசித்து வரும் செல்வரதியை கோழி மற்றும் எலுமிச்சம் பழத்தை திருடியதாக கண்டித்துள்ளார். இதில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் செல்வரதிக்கு வசந்தா மீது ஆத்திரம் இருந்து வந்துள்ளது.  

இந்த நிலையில் நேற்று செல்வரதி வசந்தாவிடம் தகராறு செய்துள்ளார் அப்போது வாக்குவாதம் முற்றியதையடுத்து தலையணையால் வசந்தாவை அமுக்கி கொலை செய்துவிட்டு யாருக்கும் சந்தேகம் வந்து விடக்கூடாது என்பதற்காக நகையையும் திருடிச் சென்றுள்ளார். பார்ப்பதற்கு முதலில் நகைக்காக வசந்தா கொலை செய்யப்பட்டது போல் வெளியே தெரிந்தது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் தான் செல்வரதி நடத்திய நாடகம் அம்பலம் ஆகியுள்ளது. செல்வபாரதிக்கு 2 மாத கைக்குழந்தை இருப்பதால் அவரை வீட்டுக்காவலில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: பேச மறுத்த காதலிக்கு தீ.. 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. இருவரை கைது செய்து விசாரணை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share