''தமிழை காட்டுமிராண்டி மொழி எனக்கூறியவரின் புகைப்படத்தை அனைத்து அறைகளிலும், மாலை போட்டு மாட்டி வைத்துள்ளீர்கள். அவரை திராவிட இயக்கத்தின் அடையாளம் என்று போற்றுகிறீர்கள்'' என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக அரசுக்கு கல்வி நிதி ஒதுக்குவது தொடர்பாக நேற்று முன்தினம் மக்களவையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும், திமுக - எம்.பி.,க்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

தர்மேந்திர பிரதானை கண்டித்து தமிழகம் முழுதும் திமுக-வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.பிம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ஒப்புக்கொண்டது. இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயாராக இருந்தது. ஆனால், ஒரு கட்டத்தில் அது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு அரசியல் செய்து வருகிறது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்..!
இந்நிலையில், மும்மொழிக் கொள்கை தொடர்பான மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,"தமிழ்நாட்டின் கல்வித்தரம் கொரோனாவிற்கு பிறகு பின் தங்கியுள்ளது. மூன்றாம் வகுப்பு மாணவர்களால் ஒன்றாம் வகுப்பு பாட புத்தகத்தை கூட படிக்க முடியவில்லை. திமுக எம்பிக்கள் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசிய நிலையில் அவரது பேச்சை திரும்ப பெற வைத்தீர்கள்.

ஆனால், தமிழை காட்டுமிராண்டி மொழி என கூறியவரின் புகைப்படத்தை அனைத்து அறைகளிலும் மாலை போட்டு வைத்துள்ளீர்கள்" என்றார்.
நிர்மலா சீதாராமனின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பேசிய திமுக எம்.பி கனிமொழி, ''பாஜக அரசு தினமும் தமிழ்நாட்டையும், எதிர்க்கட்சிகளையும் எதிர்க்கட்சித் தலைவர்களையும் இழிவு செய்கிறது. திர்க்கட்சித் தலைவர் இழிவுப்படுத்தப்பட்டார். தமிழ்நாடு எம்.பி.க்கள் இழிவுப்படுத்தப்பட்டனர்” எனத் தெரிவித்தார்.

இதேபோல், காங்கிரஸ் கட்சியின் எம்.பி. கௌரவ் கோகோய், “மத்திய நிதி அமைச்சர், சில தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல்களை மட்டும் தெரிவித்து, தமிழ்நாட்டு மக்களை அவமரியாதை செய்ய முயற்சிக்கிறார். ஒவ்வொரு நாளும், அமைச்சர்கள் தங்களின் கருத்தால், வெவ்வேறு மாநில மக்களை இழிவு செய்வதை பார்க்கிறோம். குறிப்பாக பாஜக ஆளாத மாநில மக்களை இழிவு செய்கிறார்கள். இது மீண்டும் மீண்டும் நிகழ்கிறது” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோடிக்கணக்கான ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி... குறைந்தபட்ச இ.பி.எஃப் பென்சன் 7500; பரிசீலிக்க மத்திய அரசு ஒப்புதல்..!