தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி நாம் தமிழ் கட்சியினுடைய தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கடந்த 2011 ஆம் ஆண்டு வளத்திரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். அதைத் தொடர்ந்து வருகின்ற 19 ஆம் தேதி இது குறித்து விசாரித்து அன்றே தீர்ப்பு வழங்கப்படும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

2011 ஆம் ஆண்டு வளசர்வாக்கம் காவல் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த வழக்கை ரத்து செய்யக் கூறி நாம் தமிழ் கட்சியினுடைய தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கை ரத்து செய்யக் கூறி வழக்கு மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் அந்த மனுவில் 2011 ஆம் ஆண்டு காவல் நிலத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது 2012 ஆம் ஆண்டு அது திரும்ப பெற்றுக் கொள்வதாக விஜயலட்சுமி அறிவித்ததாகவும் அதற்குப் பிறகு அந்த வழக்கு அப்படி நிறுத்தி வைக்கப்பட்டு தற்போது மீண்டும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது விஜயலட்சுமி தொடர்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இன்று இருந்து இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி இமுன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த வழக்கு தொடர்பாக பாலியல் வன்கொடுமை சட்டத்திற்கு வழக்கு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: வாய்க்கொழுப்பு....தீர்மானிக்கும் வாக்கு இல்லை...பிஹாரில் வெல்லாதவர்...மக்களை சந்திக்கணும்...விஜய் மீது நாதக, திமுக, காங்கிரஸ், பாஜக பாய்ச்சல்
அதைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினுடைய தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் இது தொடர்பாக மேலும் மூத்த வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால் எங்கள் தரப்பில் இதை விசாரிப்பதற்காக ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். அதன் அடிப்படையில் இந்த வழக்கானது வருகின்ற 19-ஆம் தேதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் அன்றைய தினமே விசாரித்து அன்று தீர்ப்பு வழங்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: தமிழகம் முழுவதும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அலை வீசுகிறது... அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி கணிப்பு..!