அரசியல் தலைவர்களை தாண்டி திரைபிரபலங்களும் மும்மொழி கொள்கையை பற்றி விவாதிக்க தொடங்கியுள்ளனர். ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யான், நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, தமிழ் திரைப்படங்களை இந்தியில் டப்பிங் செய்ய வேண்டிய அவசியம் என்ன இருக்கு, தமிழ்நாடு அரசியல்வாதிகள் இந்தியை எதிர்க்கிறார்கள், ஆனால் தங்கள் படங்களை இந்தியில் டப்பிங் செய்து பணம் சமாதிக்கிறார்கள் என்று பேசி இருந்தார்.

மேலும் இதில் என்ன லாஜிக் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ல முடியவில்லை. என்னை பொறுத்தவரை இந்தியாவுக்கு பல மொழி தேவை, நமது மொழியையும் கலாச்சாரத்தையும் பாதுகாக்க வேண்டும்.
தமிழ் படங்களை இந்தியில் டப்பிங் செய்வதன் மூலம் அவர்களின் சொந்த அடையாளத்தை இழக்க செய்யலாம் என விமர்சித்திருந்தார். பவன் கல்யாணின் இந்த பேச்சுக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: அதிகார வலிமைமிக்க கட்சியாக விசிகவை மக்கள் மாற்றுவார்கள்... நம்பிக்கையில் தொல். திருமாவளவன்..!!
இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “ உங்கள் இந்தி மொழியை எங்கள் மீது திணிக்காதீர்கள். நாங்கள் வெறுப்பது மற்றொரு மொழியை இல்லை. எங்கள் தாய்மொழியையும், நம் தாயையும் பெருமையுடன் பாதுகாப்பது. யாராவது பவன் கல்யாணுக்கு சொல்லி புரிய வையுங்கள்” என கூறியுள்ளார். இரு பெரும் திரை நட்சத்திரங்கள் இந்தி மொழியை வைத்து வார்த்தைப்போர் நடத்துவது தமிழக மற்றும் ஆந்திர அரசியல் களத்திலும், திரைத்துறையிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதற்கிடையே நடைபெற்று கொண்டிருக்கும் பட்ஜெட் கூட்டத்திலும் ஒரு போதும் தமிழக அரசு மும்மொழி கொள்கையை ஏற்காது என கூறி வருகிறது. இதேநேரம் மும்மொழி கொள்கையை சாத்தியமாக்கியே தீருவோம் என மத்திய அரசும் செயல்பட்டு வருகிறது. மொம்மொழி கொள்கையை ஆதரித்து கையெழுத்து பிரச்சாரம், அதை எதிர்த்து மொழி உரிமை போராடங்களும் வெடித்துள்ளன.
இதையும் படிங்க: இந்தியில் மட்டும் தான் பதில் வருமா..? அன்புமணி ராமதாஸ் காட்டம்!!