ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் கருத்துக்களை நியாயப்படுத்திய ஆசிரியர் ஹிதேஷ் சங்கர், ‘‘மோகன் பகவத்தின் பேச்சு ஆழ்ந்த பார்வை. சமூக மனசாட்சிக்கான அழைப்பு’’என்று எழுதியுள்ளார். இந்த தலையங்கத்துக்குப் பிறகு, பாஞ்சன்யா தலையங்கம் மீண்டும் விவாதத்திற்கு உட்பட்டுள்ளது.
நாடு சுதந்திரமடைந்த பிறகு, இந்தியாவின் நிலைமை, வாழ்க்கை திறன், கலாச்சார தேசியவாதம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக பாஞ்சன்யா இதழ் தொடங்கப்பட்டது. பாஞ்சஜன்யா என்பது ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் இந்தியில் வெளியிடப்படும் வார இதழ். இது ஆர்.எஸ்.எஸின் ஊதுகுழல் என்று எதிர் தரப்பினரால் அழைக்கப்படுகிறது. ஆனால் அந்த இதழ் அவ்வப்போது ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் நிராகரிக்கப்பட்டும் வருகிறது.
பாஞ்சன்யாவில், இந்துத்துவா, தேசியவாதம், இந்திய கலாச்சாரம் உள்ளிட்டவைகளுக்கு இந்தியாவில் இழுக்கு வரும்போதும் வெளிநாடுகளில் இந்துக்களுக்கு எதிராக பிரச்னைகள் பற்றி எரியும் போதும் அதனை மையப்படுத்தி கட்டுரைகளை வெளியாகும். இதனால்தான் அந்த இதழ் ஆர்.எஸ்.எஸின் ஊதுகுழல் என்கிற கருத்து பரப்ப்பட்டு வருகிறது. அதேவேளை பத்திரிகையின் தலையங்க சுதந்திரத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இதுவரை தலையிடவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ‘இந்து- முஸ்லீம் மோதல் வேண்டாம்...’அம்பேத்கர் பிரச்சனைக்கு அணை போடுகிறாரா மோகன் பகவத்..?
பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவால் இந்த பத்திரிக்கையில் மதிப்புகள் இந்திய தேசியவாத சித்தாந்தத்தை பராமரிக்க பாஞ்சஜன்யா இதழ் ஆரம்பிக்கப்பட்டது. குறிப்பாக இந்துக்களுக்கு எதிரான அட்டூழியங்கள், தேசியவாதம் குறித்து இந்த இதழ் இப்போதும் குரல் எழுப்பி வருகிறது.

இருந்த போதும், 1948ல் மகாத்மா காந்தியின் படுகொலைக்குப் பிறகு, காங்கிரஸ் அரசு பாஞ்சன்யா இதழை ஒடுக்க முயன்றது. அந்த இதழின் ஆசிரியர், பதிப்பாளர், அச்சுப்பொறியாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பின் அந்த அலுவலகம் பூட்டப்பட்டது. ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு நீதிமன்ற உத்தரவின் பேரில் பாஞ்சன்யா இதழ் மீண்டும் வெளி வந்தது.
பாஞ்சன்யா இதழில் வெளியான செய்திகள் பலமுறை சர்ச்சைகளை எழுப்பின. இந்நிலையில், கோவில்-மசூதி தகராறு தொடர்பாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் அறிக்கையை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஊதுகுழலான பாஞ்சஜன்யாவில் வெளியிடப்பட்டது சர்ர்சையாகி உள்ளது.
அந்த இதழ் மோகன் பகவத்தின் கருத்தை நியாயப்படுத்தியுள்ளது.
மோகன் பகவத், டிசம்பர் 19 அன்று புனேவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ‘‘யாரும் இங்கு சிறுபான்மையினரும் இல்லை. யாரும் இங்கு பெரும்பான்மையினரும் இல்லை. ராமர் கோவில் கட்டப்பட்ட பிறகு, இதுபோன்ற பிரச்னைகளை எழுப்பி இந்துக்களின் தலைவர்களாகி விடுவோம் என சிலர் நினைக்கின்றனர். ஒவ்வொரு நாளும் ஒரு புதிய பிரச்சினை எழுப்பப்படுகிறது. ஆனால், இதை எப்படி அனுமதிக்க முடியும்? நாம் ஒன்றாக வாழ முடியும்’’ என மோகன் பகவத் கூறி இருந்தார்.
ஆனால், அந்த இதழில் வெளியிடப்பட்டு இருந்த தலையங்கம் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தது. ‘‘இது வரலாற்று உண்மையையும், நாகரீக நீதியையும் அறியும் போராட்டம்’’ என்று அவர் பாஞ்சன்யா தலைலையங்கத்தில் எழுதியுள்ளார்.
இதையும் படிங்க: 2025ல் திடீர் திருப்பம்... 75 வயதில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு திரும்புகிறாரா மோடி..? பேரலையாய் பிரவாகம் எடுக்கும் அரசியல்..!