கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியங்கள் தொழிலாளர்களிடம் இருந்து வசூலித்த ரூ.70ஆயிரத்து 744 கோடியை இன்னும் பல்வேறு மாநில அரசுகள் தொழிலாளர்கள் நலனுக்காக செலவிடாமல் வைத்துள்ளன என்று தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட மனுவுக்கு மத்திய தொழிலாளர்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. இந்திய கட்டுமான தொழிலாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் அர்கா ராஜ்பண்டிட் தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் மத்திய தொழிலாளர்கள் அமைச்சகத்திடம் மனு செய்திருந்தார்.
கட்டுமானம் மற்றும் பிற கட்டிடத் தொழிலாள் சட்டம் 2005 நடைமுறைக்கு வந்தபின், ஒவ்வொரு மாநிலங்களிலும் செயல்படும் தொழிலாளர்கள் நல வாரியங்கள் வேலை வழங்குவோர், நிறுவனங்களிடம் இருந்து ரூ.ஒரு லட்சத்து 17ஆயிரத்து 507 கோடி வசூலித்துள்ளன, இதில் ரூ.67ஆயிரத்து 669 கோடி தொழிலாளர்கள் நலனுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
கட்டுமானம் மற்றும் பிற கட்டிடத் தொழிலாள் சட்டம் கடந்த 1996ம் ஆண்டு உருவாக்கப்பட்டு, கட்டுமானத் தொழிலாளர்களுக்கு அதிகாரம் அளிக்க, மாநில அசுகள் வாரியத்தை உருவாக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இந்த வாரியம் செயல்படுவதற்காக கட்டுமான நிறுவனங்கள், ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்டவர்களிடம் இருந்து ஒரு சதவீதத்துக்கு குறையாமல் 2 சதவீதத்துக்கும் அதிகரிக்காமல் செஸ் வரி வசூலிக்கப்பட்டது.
2024ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதியின்படி 36 மாநில கட்டுமானத் தொழிலாளர்கள் வாரியங்களில் 5 கோடியே 73 லட்சத்து 48ஆயிரத்து 723 தொழிலாளர்கள் தங்களை பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா தொற்றால் பிறப்பிக்கப்பட்ட லாக்டவுன் உத்தரவால், ஏராளமான கட்டுமானத் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். அவர்கள் அங்கு சென்றபின் அவர்களுக்கு போதுமான உதவிகளை மத்திய, மாநில அரசுகள் செய்யவில்லை என புகார்கள் வாரியத்துக்கு எழுந்தன.
இதையும் படிங்க: சீனாவில், வாடகைக்கு "போலி அலுவலகங்கள்" ; வேலை பார்ப்பது போல் 'நடிக்கும்' இளைஞர்களின் 'நூதன ட்ரெண்ட்'

இதையடுத்து, இந்திய கட்டுமான தொழிலாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் அர்கா ராஜ்பண்டிட் தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் மத்திய தொழிலாளர்கள் அமைச்சகத்திடம் மனு செய்திருந்தார்.
அதில், கட்டுமானத் தொழிலாளர்களிடம் இருந்து பெறப்பட்ட தொகையை வாரியங்கள் என்ன செய்தன, தொகை இருப்பு எவ்வளவு, தொழிலாளர்கள் நலனுக்காக செலவிடப்பட்ட தொகை குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு மத்திய தொழிலாளர் துறைஅ மைச்சகம் பதில் அளித்திருந்தது. அது குறித்து, இந்திய கட்டுமான தொழிலாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் அர்கா ராஜ்பண்டிட் அளித்த பேட்டியில் கூறியதாவது:
மகாராஷ்டிராவில் கடந்த 19 ஆண்டுகளாக செஸ் வரி மூலம் ரூ.19,489 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது, கடந்த 19 ஆண்டுகளில் இந்த மாநிலத்தில் மட்டும ரூ.19 லட்சம் கோடி மதிப்பில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆண்டுக்கு ரூ.ஒரு லட்சம் கோடி வீதம் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

இந்த புள்ளிவிவரங்கள் உண்மைக்கு வெகு தொலைவில் உள்ளன, மிகப்பெரிய அளவில் செஸ் வரி முறைகேடு நடந்துள்ளது. அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ளாட்சி நிர்வாகங்கள் அங்கீரித்த திட்டங்கள் அடிப்படையில் செய்யப்பட்ட கட்டுமானங்கள், திட்டங்கள் குறித்த செலவுபற்றி தகவல்கள் வழங்க வேண்டும் என ஆர்டிஐ மனுவில் கேட்டிருந்தார்.
அது மட்டுமல்லாமல் மகாராஷ்டிரா அரசு தொழிலாளர்கள் நலனுக்காக 19 ஆண்டுகளில் வசூலித்த செஸ் வரியில் குறைந்த அளவாக ரூ.13,683 கோடி மட்டுமே தொழிலாளர்கள் நலனுக்காக செலவிட்டுள்ளது. அதைத் தொடர்ந்கு கர்நாடக மாநிலம் ரூ7,921 கோடியும், உத்தரப்பிரதேசம் ரூ.7826 கோடியும் செலவிட்டுள்ளன.

மகாராஷ்டிரா அரசிடம் ரூ.9731 கோடி இருப்பு இருக்கிறது, கர்நாடக அரசிடம் ரூ.7547 கோடியும், உ.பி. அரசிடம் ரூ.6506 கோடியும் இருப்பு இருக்கிறது. கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியங்கள் தொழிலாளர்களிடம் இருந்து வசூலித்த ரூ.70ஆயிரத்து 744 கோடியை இன்னும் பல்வேறு மாநில அரசுகள் தொழிலாளர்கள் நலனுக்காக செலவிடாமல் வைத்துள்ளன
கேரளா மாநிலத்தைத் தவிர பெரும்பாலான மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் முறையாக கட்டுமான தொழிலாளர்கள் நலச் சட்டத்தை அமல்படுத்தவில்லை. தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய நலன்கள் குறைக்கப்படுகின்றன, வாரியங்களை மறுசீரமைப்பும் செய்யவில்லை.” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வாரத்துக்கு 90 மணிநேரம் வேலைபாருங்க’: ‘மனைவியையே எவ்வளவு நேரம் பார்ப்பிங்க’: எல் & டி தலைவரின் பேச்சு