ஜம்மு காஷ்மீர் மாநிலம் என்றதும் நினைவுக்கு வருவது அதன் எழில்மிகு குளிர்மலைகள். கடந்த சில ஆண்டுகளாக அங்கு இருந்துவந்த தீவிரவாத தாக்குதல்கள் மட்டுப்பட்டுள்ள நிலையில் உள்கட்டமைப்பை மேம்படுத்தி, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நடவடிக்கைகளில் மத்திய - மாநில அரசுகள் முழுமுனைப்புடன் ஈடுபட்டுள்ளன.

அதன்ஒருபகுதியாக ஜம்மு காஷ்மீரின் கந்தேர்பால் மாவட்டத்தில் ககாங்கீர் மற்றும் சோனாமார்க் ஆகிய இடங்களை இணைக்கும் வகையில் சுரங்கப்பாதை ஒன்று கட்டப்பட்டு வந்தது. Z morh என்று பெயரிடப்பட்ட இந்த சுரங்கப்பாதை இசட் வடிவில் கட்டப்பட்டுள்ளது. மலைகளை குடைந்தும், பூமிக்கு அடியிலும் ஆறரை கிலோ மீட்டர் தொலைவுக்கு இருவழிப்பாதையாக இந்த சுரங்கப்பாதை நீள்கிறது. கடல் மட்டத்தில் இருந்து 8,650 அடி உயரத்தில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த சுரங்கப்பாதை உருவாக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சீனாவுக்கு அழைப்பு... டிரம்ப் பதவியேற்பை புறக்கணிக்கும் இந்தியா... மோடியின் இப்படியொரு ராஜதந்திரமா..?

வழக்கமாக சோனாமார்க் பகுதி குளிர்காலத்தில் தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து துண்டிக்கப்பட்டு விடும். உறைபனியால் சூழப்பட்டு சாலைகள் பயன்படுத்தப்பட முடியாத நிலையில் இருக்கும். இந்த சுரங்கப்பாதை நடைமுறைக்கு வந்துள்ளதன் மூலம் எல்லா பருவகாலங்களிலும் சோனாமார்க் செல்ல முடியும். தேசிய நெடுஞ்சாலை -1-ஐ பயன்படுத்தவும் முடியும்.
2700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்த 10 ஆண்டுகளாக முழுவீச்சில் கட்டப்பட்டு வந்த இந்த பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதற்காக டெல்லியில் இருந்து இன்றுகாலை 10.45 மணியளவில் சிறப்பு விமானம் மூலம் ஸ்ரீநகர் வந்தடைந்தார் மோடி. பின்னர் அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் நீல்கிராட் சென்ற அவர் குதிரைப்படை மரியாதையோடு சுரங்கப்பாதை கட்டுப்பட்டுள்ள இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பின்னர் சுரங்கப்பாதையை திறந்துவைத்து நாட்டிற்கு அர்ப்பணித்த மோடி, அதன் கட்டுமானப் பணியாளர்களுடன் கலந்துரையாடினார். இந்த சுரங்கப்பாதை மூலம் லே பகுதிக்கு எளிதில் ராணுவ தளவாடங்களை கொண்டு செல்ல முடியும். கூடவே குல்மார்க் போன்று சிறந்த குளிர்கால விளையாட்டு மையமாக சோனாமார்க் உருவாகும். இதன்மூலம் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பதோடு, ஜம்மு காஷ்மீரின் பொருளாதாரம் மேம்படும் என்பது உறுதி. ஜம்மு காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹா, முதலமைச்சர் உமர் அப்துல்லா, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் இந்த விழாவில் பங்கேற்றனர்.
சோனாமார்க் சுரங்கப்பாதை ஒட்டுமொத்தமாக 12 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இன்று திறப்பு விழா கண்டுள்ளது அதன் பிரதான சுரங்கப்பாதையான ஆறரை கிலோ மீட்டர் நீளம் கொண்ட பகுதியாகும். நாளொன்றுக்கு ஆயிரம் வாகனங்கள் செல்லக்கூடிய வகையிலும், மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. 2028-ம் ஆண்டு முடிக்க திட்டமிடப்பட்டுள்ள சோஜிலா திட்டத்தின் ஒரு பகுதிதான் இந்த சோனாமார்க் சுரங்கப்பாதை. அந்த திட்டம் நடைமுறைக்கு வரும்பட்சத்தில் தலைநகர் ஸ்ரீநகர் மற்றும் லடாக் இடையே தடையற்ற பயணப்பாதை உருவாகும்.

ரஹ்மத்ஸ்ரீநகர் - சோனாமார்க் சுரங்கப்பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி..

இதையும் படிங்க: உலகின் மிக உயர்ந்த தலைவர்... பிரதமர் மோடியை ஆஹா ஓஹோவென புகழும் சந்திரபாபு நாயுடு..!