பிரதமர் நரேந்திர மோடி, பத்து ஆண்டுகளில் இரண்டாவது முறையாக மொரிஷியஸ் தேசிய தினத்தில் முதன்மை விருந்தினராக பங்கேற்று, அந்நாட்டின் ‘தி கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஸ்டார் அண்ட் கீ ஆஃப் தி இந்தியன் ஓஷன்’ என்ற உயரிய விருதை பெற்றார்.
விருதைப் பெற்ற பின் பேசிய பிரதமர் மோடி, இந்த விருதை பெறுவது பெருமையளிக்கிறது. இதை 140 கோடி இந்திய மக்களுக்கும், நம் நாடுகளின் நூற்றாண்டு கால நட்பிற்கும் அர்ப்பணிக்கிறேன்,” என தனது உரையில் கூறி, இரு நாடுகளின் சிறப்பான உறவை வெளிப்படுத்தினார்.

மொரிஷியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் செவ்வாய்க்கிழமை இந்த விருதை அறிவித்தார். மோடியின் இரண்டு நாள் பயணத்தின்போது இவ்விருது வழங்கப்பட்டது. மொரிஷியஸ் நாட்டின் இந்த உயரிய விருதை பெறும் முதல் இந்தியர் மோடி ஆவார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடியின் மொரீஷியஸ் பயணம்... சீனாவின் திட்டங்களை அடித்து நொறுக்கிய இந்தியா..!
இது பிரதமர் மோடி பெறும் 21வது சர்வதேச விருது ஆகும். மொரிஷியஸ் நாடு குடியரசு ஆனதிலிருந்து, நெல்சன் மண்டேலா (1998) உட்பட ஐந்து வெளிநாட்டு தலைவர்களே இதை பெற்றுள்ளனர்.
2015-ல் மோடியின் முந்தைய வருகை, வரலாறு, பண்பாடு, புலம்பெயர் உறவுகளால் வலுவான இந்திய-மொரிஷியஸ் உறவை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. டிசம்பர் 2024-ல் குவைத்தின் ‘ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர்', கயானாவின் ‘ஆர்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்', டொமினிக்காவின் ‘டொமினிகா அவார்டு ஆஃப் ஹானர்', நவம்பர் 2024-ல் நைஜீரியாவின் ‘கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி நைஜர்’ (1969-ல் ராணி எலிசபெத்திற்கு பின் முதல் வெளிநாட்டவர்) ஆகியவை மோடியின் சமீபத்திய விருதுகள் ஆகும்.

இவை அவரது உலகளாவிய தலைமையையும் இந்தியாவின் செல்வாக்கையும் உலக அளவில் பிரதிபலிக்கின்றன.
மோடியின் 20 விருதுகளில் சவுதியின் ‘கிங் அப்துல் அஜிஸ் சாஷ்’ (2016), ரஷ்யாவின் ‘ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ’ (2019), பிரான்ஸின் ‘கிராண்ட் கிராஸ் ஆஃப் தி லெஜியன் ஆஃப் ஹானர்’ (2023) ஆகியவை அடங்கும்.

ஐநா-வின் ‘சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த்’ (2018), சியோல் அமைதி பரிசு (2018), கேட்ஸ் அறக்கட்டளையின் ‘குளோபல் கோல்கீப்பர் அவார்டு’ (2019) போன்றவையும் அவரது சாதனைகளை உயர்த்துகின்றன.
பகுப்பாய்வாளர்கள், மோடியின் பதவியில் இந்தியாவின் உலகளாவிய உறவுகள் வலுவடைவதை இவை காட்டுவதாக கருதுகின்றனர்.
மொரிஷியஸ் நாடு மோடிக்கு வழங்கியுள்ள விருதை இந்திய மக்களுக்கு அர்ப்பணித்து, இரு நாடுகளுக்கிடையான உறவு மேம்பட்டு வருவதை அவர் உறுதிப்படுத்தினார்.
இதையும் படிங்க: "இது அடிக்கடி பறக்கும் நேரம்".. பிரதமரின் மொரீசியஸ் பயணம் குறித்து காங்கிரஸ் கிண்டல்..!