பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் தற்போது நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் உடைய இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் வெளியிட்ட அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பாமக தலைவராக நான்தான் நீடிப்பேன். நிறுவனராகவும் தலைவராகவும் நான்தான் இருப்பேன். அன்புமணி ராமதாஸ் வந்து தலைவர் அல்ல அவர் வந்து செயல் தலைவராக செயல்படுவார் என்ற ஒரு முக்கிய அறிவிப்பினை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டிருந்தார். இது கட்சியில் பெரும் அதிர்ச்சியும் கொந்தளிப்பும் ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: முறையாக தகவல் சொல்ல அரசுக்கு என்ன தயக்கம்? TNPSC குரூப் 4 விவகாரத்தை கையில் எடுத்த அன்புமணி!

அதனை தொடர்ந்து தான் திண்டிவனத்தில் இருக்கக்கூடிய அவர் வீட்டு முன்பாக அதாவது அன்புமணி ராமதாசுக்கு ஆதரவாகவும், டாக்டர் ராமதாசுக்கு ஆதரவாகும் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இரு தரப்பு ஆதரவாகவும் தொண்டர்கள் கோஷமிட்டதைத் தொடர்ந்து, இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதமும் ஏற்பட்டது. இப்பிரச்சனைகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தைலாபுரம் தோட்டத்திற்கு பாமக முக்கிய நிர்வாகிகள் குவிந்து வருகின்றனர்.

பாமக நிறுவனர் ராமதாசை சந்திப்பதற்காக மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார், பாமக நிறுவனரின் மூத்த மகள் காந்திமதி அதாவது இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முகுந்தனின் தாயார். பாமக பொருளாளர் திலக பாமாம், வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த பாலு உள்ளிட்டோர் வந்துள்ளனர். ராமதாஸின் அறிவிப்பை தொடர்ந்து அதுகுறித்து ஆலோசிப்பதற்காக இவர்கள் அனைவரும் இங்கு வந்துள்ளனர். சுமார் 2 மணி நேரமாக ராமதாஸ் உடைய முக்கிய குடும்ப உறுப்பினர்கள் அவருடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இது பாமகவினர் மத்தியில் பெரும் குழப்பத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அனுமதி இல்லாத படிப்பை தொடங்கும் பெரியார் பல்கலை., தடுத்து நிறுத்த அன்புமணி வலியுறுத்தல்..!