ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாக்கியராஜ், சென்னையில் முடி திருத்தும் தொழில் செய்து வருகிறார். மதுரவாயலில் உள்ள ஆலப்பாக்கம் ஸ்ரீலட்சுமி நகரை சேர்ந்த ரஞ்சித் என்பவரிடம் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு 50 ஆயிரம் ரூபாயை கடனாக பெற்றுள்ளார். பாக்கியராஜ் வாங்கிய கடனில் ஐந்தாயிரம் ரூபாய் மட்டுமே திருப்பி கொடுத்து, மீதம் தொகையான 45 ஆயிரம் ரூபாயை பிறகு தருவதாக கூறி வந்துள்ளார்.

இது தொடர்பாக பாக்கியராஜ், ரஞ்சித்திடம் பலமுறை கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். ஆனால், வாங்கிய பணத்தை திருப்பி தராமல் பாக்கியராஜ் இழுத்து அடித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித் அவரது மைத்துனர் பிச்சைமணி என்பவருடன் சேர்ந்து கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி ஆலப்பாக்கம் பகுதியில் உள்ள ஜூஸ் கடையில் நின்று கொண்டிருந்த பாக்யராஜை இரு சக்கர வாகனத்தில் கடத்தி சென்றனர்.
இதையும் படிங்க: மாணவனை சக மாணவர்களே கடத்தி கொலை செய்த துணிகரம்.. போலீசார் விசாரணை..

தொடர்ந்து ரஞ்சித் வீட்டுக்கு அழைத்துச் சென்று அவர் மீது கடுமையாக தாக்கியுள்ளனர். பணத்தை வேறொரு நபரிடம் இருந்து வாங்கிக் கொடுப்பதாக கூறி அங்கிருந்து தப்பிச் சென்ற பாக்கியராஜ், இது தொடர்பாக மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், தாக்குதல் நடத்திய ரஞ்சித் மற்றும் அவரது மைத்துனர் பிச்சைமணி ஆகிய இருவரையும் கைது செய்து, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கோவையில் 10 வயது சிறுவனை கடத்த முயற்சி.. சுற்றி வளைத்த போலீசார்!