×
 

சமக்ர சிக்ஷா அபியான் திட்ட நிதி இன்னும் 12 மாநிலங்களுக்கு வழங்கவில்லை.. மத்திய அரசு தகவல்..!

சமக்ர சிக்ஷா அபியான் திட்ட நிதியை இன்னும் 12 மாநிலங்களுக்கு வழங்கவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சமக்ர சிக்ஷா அபியான் திட்ட நிதியை இன்னும் 12 மாநிலங்களுக்கு வழங்கவில்லை என்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தில் மத்திய அரசு 60% நிதியும், மாநில அரசு 40 சதவீத நிதியும் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் எம்.பி. பால்யா மாமா சுரேஷ் கோபிநாத் மாத்ரே, ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. லவ்லி ஆனந்த் ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு, மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி மக்களவையில் பதில் அளித்தார். அவர் கூறுகையில் “சமக்ர சிக்ஷா அபியான் திட்ட நிதியை இன்னும் 12 மாநிலங்களுக்கு வழங்கவில்லை. மொத்தமுள்ள 10.17 லட்சம் பள்ளிகளில் 49.5 சதவீத பள்ளிகளில் இன்னும் கணினி வசதி ஏற்படுத்தவில்லை.

இதையும் படிங்க: தர்மேந்திர பிரதானே ஆணவப் பேச்சுக்கு மன்னிப்பு கேள்.. சிபிஎம் கடும் விமர்சனம்.!

பள்ளிகளில் சாய்வுதளங்கள், கைபிடுகள் அமைக்க சமக்ரா சிக்ஸா திட்டத்தின் கீழ் 18 மாநிலங்ள், யூனியன் பிரதேசங்களுக்கு இன்னும் நிதி ஒதுக்கவில்லை. ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப்பிரதேசம், பீகார், குஜராத், ஹரியானா, இமாச்சலப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், கர்நாடகா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழகம், உத்தரகாண்ட், மேற்கு வங்க மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை. 2024-25 நிதியாண்டில் ரூ.2.54 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது.  14.9% பள்ளிகளில் இந்த வசதிகளே இல்லை என்று ஒருங்கிணைந்த மாவட்ட கல்விக்கான தகவல் மையம் கடந்த ஜனவரியில் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அசாம், பீகார், குஜராத், ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, மிசோரம், ஒடிசா, பஞ்சாப், சிக்கிம், தமிழகம், மேற்கு வங்கத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்னும் கணினி அறை அமைக்க நிதி வழங்கவில்லை. கடந்த 2024-25ம் ஆண்டில் இந்த மாநிலங்களுக்கு கணினி அறை அமைக்க ரூ.158.88 கோடி ஒதுக்கியது. ஆந்திரப்பிரதேசம், ஹரியானா, கர்நாடகா, மசிரோம் மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக கழிவறை உருவாகக்கூட நிதி ஒதுக்கவில்லை. 

ஆனால், ஒருங்கிணைந்த மாவட்ட கல்விக்கான தகவல் மைய அறிக்கையில் 90 சதவீத அரசுப்பள்ளிகளில் மாண வர்களுக்கான கழிவறைகள் செயல்படுகின்ற, 93.2 சதவீத மாணவிகள் கழிவறைகள் செயல்படுகின்றன. எஸ்எஸ்ஏ திட்டத்தின் கீழ் 11 மாநிலங்கள் சிறப்பு தேவையுள்ள குழந்தைகளுக்கான நிதியை பெறவில்லை. அரசுப் பள்ளிகளில் 30.6% மட்டுமே எளிதாக அனுகும் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.

திமுக எம்.பி. ஈஸ்வரசாமி, பாஜக எம்.பி. விஷ்ணு தயால் ராம் ஆகியோர் எழுப்பிய மற்றொரு கேள்விக்கு மத்திய அமைச்சர் சவுத்ரி பதில் அளிக்கையில் “லட்சத்தீவுகள், புதுச்சேரி, கோவா உள்ளிட்ட பிற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.625.81 கோடி தகவல் மற்றும் கணினி தொழில்நுட்பத்தில் கணினி அறை அமைக்க ஒதுக்கப்பட்டது. ஆனால், உ.பி. ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மணிப்பூர் மாநிலங்கள் மட்டுமே இந்த நிதியில் ரூ.36.11 கோடி பயன்படுத்தியுள்ளனர். மற்ற மாநிலங்கள் இந்த நிதியைப் பயன்படுத்தவில்லை

இவ்வாறு ஜெயந்த் சவுத்ரி தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழக மக்கள் தேர்ந்தெடுத்த எம்.பி.க்களை அநாகரீகமாக பேசுவதா.? தர்மேந்திர பிரதானை வறுத்தெடுத்த செல்வபெருந்தகை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share