×
 

கேரளாவில் வரலாற்று நிகழ்வு.. ‘அனைத்து சமூகத்தினரும்’ வழிபட பிரபல கோயில் கதவு திறப்பு..!

கேரளாவில் உள்ள ராயரமங்கலம் கோயிலில் அனைத்து சமூகத்தினரும் வழிபடும் வகையில் கோயிலின் நிலம்பலம் கதவு திறக்கப்பட்டது.

கேரள மாநிலத்தில் வரலாற்று நிகழ்வாக, காசர்கோடு மாவட்டத்தில் பிள்ளிகோடு ராயரமங்கலம் கோயிலில் அனைத்து சமூகத்தினரும் வழிபடும் வகையில் கோயிலின் நிலம்பலம் கதவு திறக்கப்பட்டது. இந்த கோயில் கட்டப்பட்டபின் வரலாற்றில் முதல்முறையாக நிலம்பலத்தில் சென்று அனைத்து சமூகத்தினரும் சாமி தரிசனம் செய்ய கதவு திறக்கப்பட்டது இதுதான் முதல்முறையாகும்.

இதற்கு முன் நிலம்பலக் கதவு வழியாக, உயர் சமூகத்தினரான பிராமனர்கள், மரார்கள், வாரியார் ஆகியோர் மட்டுமே சென்று கடவுளை வழிபடமுடியும். மணியானி, நாயர், வனியா, விஸ்வகர்மா உள்ளிட்ட சில சமூகத்தினர் பண்டிகை நாட்களில் மட்டும் நிலம்பலக் கதவு வழியாக வழிபடஅனுமதிக்ககப்படுவார்கள். இவர்கள் தவிர பிற சமூகத்தினருக்கு இந்த வழியாகச் செல்ல அனுமயதியில்லை.

இதையும் படிங்க: எதிர்த்தாலும், முதல்ல அமல்படுத்துவோம்..! வக்ஃபு சட்டத்தை அமல்படுத்த கேரள அரசு நடவடிக்கை..!

இதற்கு முன் சில சமூகத்தினருக்கு இந்த பாதை வழியாகச் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை. ஆனால், தற்போது கோயிலின் 4 பக்க கதவுகளும் திறக்கப்பட்டு அனைத்து சமூகத்தினரும் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

கேரளாவில் சித்திரை 1ம் தேதி விஷூ பண்டிகை கொண்டாடப்படும். இதற்கு முந்தைய நாளான நேற்று 16 பக்தர்கள் கோயின் உள்பிரகாரத்துக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர். அதைத் தொடர்ந்து மற்ற சமூகத்தினரும் உள்ளே வந்து சாமிதரிசனம் செய்தனர்.

இந்த 16 பேர் கொண்ட குழுவின் உறுப்பினர் கே.வி.ராஜேஷ் கூறுகையில் “இந்த கோயிலின் நிலம்பல வாயில் வழியாக பிராமனர்கள், மாரார், வாரியர் மட்டுமே முன்பு அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மணியானி, நாயர், வனியா, விஸ்வகர்மா உள்ளிட்ட சிலரும் பண்டிகை நாட்களில் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். 

ஆனால், பிள்ளிகோடு நினவு புருஷ் ஸ்வயம்சஹாயா சங்கம் எனும் புரட்சிகர இயக்கம் சார்பில் அனைத்து சமூகத்தினரும் கோயிலின் நிலம்பல வாயில் வழியாகச் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி கோரியது. சமூக கலாச்சார மற்றும் அரசியல் அமைப்பான ஜானக்கிய சமிதி சார்பில் தலைமை தந்திரி, மாநில தேவஸம் அமைச்சர் விஎன் வாசவன், கோயிலின் நிர்வாகக்குழு ஆகியோருக்கு மனு அனுப்பி, வழிபாடு உரிமை கோரியது.

இது குறித்து தேவஸம் அமைச்சர் விஎன் வாசவன் கூறுகையில் “வழிபாட்டு உரிமை கோரி மனு அளித்தனர் இதை தந்திரிக்கும் அனுப்பி வைத்தேன். கோயிலின் நிலம்பல வாயில் வழியாக அனைத்து பத்கர்களும் செல்லலாம், கோயிலின் வழக்கமான பூஜைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செல்லலாம்” எனத் தெரிவித்தார்.

கோயிலில் தற்போது பண்டிகைக் காலம் என்பதால் சிறப்பு பூஜைகள்  நடந்து வருகின்றன. இந்த பண்டிகை முடிந்தபின் கோயிலின் நிலம்பலத்தில் அனைத்து சமூகத்தினரும் நின்று தரிசனம் செய்ய அனுமதி கிடைத்துள்ளது என்று ஜானகிய சமதி உறுதி செய்துள்ளது.நூற்றாண்டுகாலம் கடைபிடிக்கப்பட்ட வந்த வழக்கம் காலத்துக்கு ஏற்றார்போல் மனிதர்களை சமமாக நடத்தும் முறைக்கு மாறியது தங்களுக்கு கிடைத்த வெற்றி எனத் தெரிவித்துள்ளனர்.
 

இதையும் படிங்க: கேரள மாநில பாஜக தலைவராகிறார் ராஜீவ் சந்திரசேகர்.. வேட்புமனுத் தாக்கல் செய்தார்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share