16 ஆண்டுகள் "லிவ் இன்" உறவில் இருந்தாலும் கற்பழிப்பு புகார் கூற முடியாது... உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!
16 ஆண்டுகள் லிவ் இன் உறவில் இருந்தாலும் கற்பழிப்பு புகார் கூற முடியாது என உச்ச நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.
திருமணம் ஆகாமல் "லிவ் இன்" உறவில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் தங்கள் இணையர்களுக்கு எதிராக பாலியல்- கற்பழிப்பு புகார் கூற முடியாது என்று பேராசிரியை தொடர்புடைய வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
இந்த வழக்கின்மேல் முறையீட்டாளர் ரஜினீஷ் சிங் என்கிற சோனி 2023-ம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு இது. இது தொடர்பான புகார் புகார் எட்டாவா என்ற இடத்தில் இருக்கும் பகேவர் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், 2022 ஆம் ஆண்டில் தனக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரிக்கை விடுத்திருந்தது. அவரது மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.
இந்த வழக்கு 2022 ஜூலை 5ஆம் தேதி அன்று புகார்தாரர் (திருமதி ஏ) பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் இழந்ததாகும். குற்றம் சாட்டப்பட்ட சிங் 2006 ஆம் ஆண்டு முதல் தவறான திருமண வாக்குறுதி என் கீழ் தன்னை பாலியல் ரீதியாக சுரண்டி வந்ததாக அவர் குற்றம் சாட்டியிருந்தார் . குற்றம் சாட்டப்பட்டவர் (சிங்)ஆரம்பத்தில் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் ஆகும். பின்னர் வங்கி ஊழியர் ஆகும்.
இதையும் படிங்க: மீண்டும் நிர்பயா! புனே பேருந்தில் பெண் பலாத்கார வழக்கு.. 75 மணி நேரத்தில் குற்றவாளி கைதானது எப்படி..?
திருமணத்தை உறுதியளித்து மீண்டும் மீண்டும் தன்னுடன் உடல் ரீதியான உறவுகளை ஏற்படுத்தினார். மேலும் அவர் தனக்கு போதை பொருள் கொடுத்து ஆபாச வீடியோக்களை பதிவு செய்து பல ஆண்டுகளாக தன்னை மிரட்டி வந்ததாகவும் அவர் கூறியிருந்தார்.
உறவின் போது, தான் கர்ப்பமாகி விட்டதாக கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தப்பட்டதாகவும் புகார்தாரர் குற்றம் சாட்டினார். மேலும் அவர்களுடைய நெருக்கமான வீடியோக்களை பகிரங்கப்படுத்துவதாக மிரட்டி சிங் தன்னிடமிருந்து பணம் பறித்ததாகவும் கூறி இருக்கிறார். இந்த நிலையில் சிங் வேறு ஒரு பெண்ணை மணந்த போது விவகாரம் உச்சத்தை எட்டியது. அதைத் தொடர்ந்து புகார்தாரர் (திருமதி ஏ) போலீசில் புகார் அளித்திருந்தார்.
சம்மதம் மற்றும் உண்மை பற்றிய தவறான கருத்து!
நீதிமன்றத்தின் முன்பு இருந்த முதன்மையான சட்ட கேள்வி.. பாலியல் உறவுகளுக்கு புகார்தாரரின் ஒப்புதல் தவறான திருமண வாக்குறுதியால் பாதிக்கப்பட்டதா..? இதன் மூலம் இந்திய தண்டனைச் சட்ட பிரிவு (ஐபிசி)376 இன் கீழ் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதா? என்பதுதான்.
நீடித்த உறவும் தன்னார்வமும்..
புகார்தாரரும் குற்றச்சாட்டப்பட்டவரும் பலமுறை விருப்பத்துடன் சந்தித்த 16 வருட உறவை வற்புறுத்தல் அல்லது சம்மதம் அற்றது என வகைப்படுத்த முடியுமா?
தாமதமான முதல் தகவல் அறிக்கை மற்றும் ஆதார மதிப்பு:
முதல் பாலியல் முரளி ஈடுபட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு 16 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்வதில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க தாமதமும் குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மையை மதிப்பிடுவதில் ஒரு முக்கிய காரணியாக அமைந்தது.
இரு நீதிபதிகள் அடங்கியிருந்த அமர்வு புகார் தாரரின் குற்றச்சாட்டுகளில் பல முரண்பாடுகளையும் குறிப்பிட்டது.
புகார்தாரர் மிகவும் கல்வித் தகுதி வாய்ந்த மற்றும் நல்ல நிலையில் உள்ள முக்கிய பெண்ணாக இருந்தும் கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக மேல் முறையீட்டாளரின் கோரிக்கைகளுக்கு இணங்கி சென்றிருக்கிறார். திருமண வாக்குறுதியின் போலி காரணத்தின் கீழ் மேல்முறையீட்டாளர் தன்னை பாலியல் ரீதியாக சுரண்டுவதாக எந்த தரப்பினருக்கும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பது நம்புவதற்கு கடினமாக உள்ளது.
புகாரரும் குற்றம் சாட்டப்பட்டவரும் நீண்ட காலமாக நேரடி உறவில் இருந்ததாகவும் அவர்களின் தொடர்பின் நீண்ட கால மற்றும் தன்னார்வ தன்மையை கருத்தில் கொண்டு பலவந்தப்படுத்துதல் மற்றும் வஞ்சகம் தொடர்பான குற்றச்சாட்டுகள் நம்ப முடியாதவை என்றும் நீதிமன்றம் மேலும் குறிப்பிட்டு இருக்கிறது. முன்னுதாரணங்களை மேற்கோள் காட்டி திருமண வாக்குறுதிகள் பெறப்பட்ட சம்மதத்தை குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆரம்பத்திலிருந்து திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்று காட்டப்படாவிட்டால் விருப்பம் இல்லாமல் செய்யப்பட்டதாக கருத முடியாது என்பதை தீர்ப்பு எடுத்துக்காட்டுகிறது.
அடைப்புக் குறிக்கும் இருப்பது நீதிபதிகளின் கருத்துக்கள்...(இதே போன்ற கடந்த கால தீர்ப்புகளில் இருந்து உதாரணம் காட்டப்பட்டது). அவை நீடித்த ஒருமித்த உறவுகளை பின்னர் உறவு முடிந்தால் மட்டுமே பாலியல் வன் கொடுமையாக வகைப்படுத்த முடியாது என்றும் தீர்ப்பு தெளிவு படுத்தியது.
("ஒரு பெண் தெரிந்தே நீண்ட காலத்திற்கு உடலுறவைப் பேணுகிற சூழ்நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர் அவரை திருமணம் செய்து கொள்வதாக அளித்ததாக கூறப்படும் வாக்குறுதியின் காரணமாக மட்டுமே அந்த உடலுறவு ஏற்பட்டது என்பதை உறுதியாக கூற முடியாது")
முதல் தகவல் அறிக்கை ரத்து!
பாலியல் பலாத்காரம் மிரட்டல் மற்றும் குற்றச்சாட்டுகள் ஆதாரங்களால் நிரூபிக்கப்படவில்லை என்றும் அவை ஒரு பின்னோக்கிய சிந்தனையாக தோன்றுவதாகவும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
தோல்வியுற்ற உறவுகளில் இருந்து எழும் தனிப்பட்ட குறைகளை தீர்ப்பதற்கான ஒரு கருவியாக குற்றவாளிகள் சட்டத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது என்றும் அது வலியுறுத்தியது.
(முதல் பாலியல் உடலுறவு செயலுக்கு இடையேயான 16 வருட நீண்ட இடைவெளி முதல் தகவல் அறிக்கை (எஃப் ஐ ஆர்)பதிவு செய்யப்படும் வரை ஒன்றரை தசாப்தங்களாக தொடர்ந்த உறவுகள்.. இது ஒரு காதல் விவகாரம்/லிவ் -இன் உறவு முறிந்ததற்கான தெளிவான வழக்கு என்பதை நமக்கு உணர்த்துகிறது)
அதன்படி உச்சநீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான முதல் தகவல் அறிக்கை மற்றும் அதன் விளைவாக எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் ரத்து செய்து அரசு தரப்பு சட்ட செயல் முறையை முற்றிலும் துஷ்பிரயோகம் செய்திருப்பதாகவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
கற்றறிந்த உயர் கல்வித் தகுதி வாய்ந்த ஒரு பெண் தவறான திருமண வாக்குறுதியின் கீழ் 16 ஆண்டு கால லிவ்விங் உறவில் எந்தவித எதிர்ப்பும் கூறாமல் நீடித்தார் என்பதை நம்புவதற்கு கடினமாக உள்ளது என்று தீர்ப்பை எழுதிய நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த குறிப்பிடத்தக்க ஒரு தீர்ப்பில் இந்தியாவின் உச்ச நீதிமன்றம் திருமண வாக்குறுதியின் போலி காரணத்தின் கீழ் பாலியல் பலாத்காரம் மிரட்டல் மற்றும் ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு ஆளான ரஜினி சிங் சோனி என்பவர் மீதான குற்றவியல் நடவடிக்கைகள் அனைத்தையும் ரத்து செய்தது.
நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்றம் அமர்வு முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
இதையும் படிங்க: அரசு பஸ்சுக்குள் இளம்பெண் பலாத்காரம்.. சசோதரி என அழைத்தவன் செய்த கொடூரம்.. ஏசி பஸ்சில் தனியே சிக்கிய பெண்..