உ.பியில் 8 ஆண்டுகளில் 210 கோடி மரங்கள்.. யோகி ஆதித்யநாத் அதிரடி..!
கடந்த எட்டு ஆண்டுகளில் உத்தர பிரதேசத்தில் 210 கோடி மரங்கள் நடப்பட்டதாக யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், கடந்த எட்டு ஆண்டுகளில் மாநிலத்தில் 210 கோடி மரங்கள் நடப்பட்டதாக அறிவித்தார். விரைவான நகரமயமாக்கல் மற்றும் தொழிற்சாலை விரிவாக்கம் இருந்தபோதிலும், இது மாநிலத்தின் வனப்பரப்பை கணிசமாக அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார்.
கோரக்பூரில் நடைபெற்ற தேசிய சுத்த காற்று திட்ட மாநாட்டில் பேசிய அவர், இந்த மரங்கள் செழிப்பாக வளர்வதை உறுதி செய்ய அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
இதற்காக, டேராடூனில் உள்ள வன ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சத்தீஸ்கர் பல்கலைக்கழகம் ஆகியவை மரங்களின் வளரும் விகிதத்தை கண்காணித்து வருகின்றன என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தார்ப்பாய்களால் மூடப்படும் மசூதிகள்.. சச்சரவுகளை தடுக்க உ.பி.அரசு நடவடிக்கை..!
மாநில அரசு நடவு செய்த மரங்களில் 70-75% நன்கு வளர்ந்தந்துள்ளது என்றும், தனியார் மற்றும் தன்னார்வ குழுக்களால் நடப்பட்டவற்றில் 65-70% வளரும் விகிதம் உள்ளதாகவும் ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
“மக்கள் தொகை வளர்ச்சி, புதிய தொழிற்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு மத்தியில், உத்தர பிரதேசத்திற்கு இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்” என்று அவர் கூறினார்.
இந்த முயற்சி கார்பன் உமிழ்வைக் குறைத்ததற்கு வலு சேர்ப்பதாகவும், தேசிய அளவில் உத்தர பிரதேசம் வனப்பரப்பு அதிகரிப்பில் தனித்து நிற்பதாகயவும் அவர் கூறினார். டெல்லி-என்.சி.ஆர். பகுதியில் நிலவும் காற்று மாசுபாடு குறித்த கவலைகளை தெரிவித்த ஆதித்யநாத், தொடர்ந்து நீடிக்கும் புகைமூட்டத்திற்கு யார் பொறுப்பு என்று கேள்வி எழுப்பினார்.
உஜ்வலா யோஜனா திட்டத்தை அவர் பாராட்டினார். இது 10 கோடி குடும்பங்களுக்கு இலவச எல்பிஜி சிலிண்டர்களை வழங்கி காற்றின் தரத்தை மேம்படுத்தியுள்ளது. இருப்பினும், பலர் இன்னும் மரம் மற்றும் நிலக்கரியை சார்ந்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதாகவும், குறிப்பாக நுரையீரல் மற்றும் கண்களை பாதிப்பதாகவும் அவர் எச்சரித்தார்.
சுத்தமான எரிபொருளுக்கு மாற வேண்டும் என்றும், “புகைக்கு மிக அருகில் இருப்பவர்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்” என்று அவர் எச்சரித்து, இதுகுறித்த விழிப்புணர்வை அதிகரிக்க அழைப்பு விடுத்தார். மாசுபாட்டை எதிர்த்து போராட, மழைநீர் சேகரிப்பு, சுருக்கப்பட்ட பயோகேஸ் மற்றும் ஆறுகளை சுத்தமாக வைத்திருத்தல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த நடவடிக்கைகளையும் முதலமைச்சர் ஆதித்யநாத் வலியுறுத்தினார். தனியார் நிறுவனங்களின் கண்காணிப்போடு செடிகள் நல்லபடியாக வளர்வதை உறுதி செய்வதாகவும், உத்தர பிரதேசத்தின் மாதிரி நிலையான வளர்ச்சிக்கு ஒரு திட்டமாக உள்ளதாகவும் ஆதித்யநாத் கூறினார்.
இந்தியாவின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் ஒன்றான உத்தர பிரதேசத்தில், வளர்ச்சியையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் சமநிலைப்படுத்துவதாக அவர் கூறினார்.
இதையும் படிங்க: கும்பமேளாவில் ரூ.30 கோடி சம்பாதித்த படகோட்டி... அரசுடன் கிரிமினல்கள் தொடர்பு.. விசாரணை நடத்த வலியுறுத்தல்..!