×
 

இடிந்தும் விழும் நிலையில் வீடு .. ஆட்டோவில் வாழ்க்கை நடத்தும் அவலநிலை ..கதறும் மாற்றுத்திறனாளி..!

கோவில்பட்டியில் எப்போது வேண்டும் என்றாலும் இடிந்தும் விழும் நிலையில் வீடு உள்ளது அதனால் ஆட்டோவில் வாழ்க்கை நடத்தி வருகிறான் அரசு உதவி செய்யவில்லை என்றால் தற்கொலை தான் தீர்வு என கதறியுள்ளார் மாற்றுத்திறனாளி ஒருவர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இளையரசனேந்தல் கிராமம் கிழக்கு தெருவினைச் சேர்ந்தவர் கடல்பாண்டி(38). மாற்றுத்திறனாளியான இவருக்கு திருமணமாகி ஒரு பெண், ஒரு ஆண் என 2 குழந்தைகள் உள்ளன. இவருடைய மனைவி பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். கடல்பாண்டி 5ம் வகுப்பு படித்து வரும் தனது 10வயது மகனுடன் வசித்து வருகிறார்.

12வயதில் கடல் பாண்டி அட்டை கம்பெனியில் வேலை பார்த்த போது இயந்திரத்தில் ஏற்பட்ட விபத்தில் அவருடைய வலது கை பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட கையுடன் தான் வாழ்ந்து வருகிறார். ஒரு தனியார் குடிநீர் நிறுவனத்தில் வாகனம் மூலம் குடிநீர் விநியோகம் செய்து வருகிறார். மாற்றுத்திறனாளியான இவர் தனது வலிiயும் பொருட்படுத்தமால் தனது குடும்ப வாழ்வாதரத்திற்காக உழைத்து வருகிறார். இதன் மூலம் தினந்தோறும் கிடைக்கும் ரூ.500 மற்றும் அரசு வழங்கும் மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை மூலமாக குடும்பத்தினை நடத்தி வருகிறார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கடல்பாண்டி வாழ்ந்து வரும் வீடு சேதமடைந்தது. எனவே தன்னுடைய வீட்டினை சரி செய்து தர வேண்டும் அல்லது மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும், தன்னுடைய உடல்நிலையை கருத்தில் கொண்டு அரசு வேலை வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை மனு வழங்கி வந்துள்ளார்.

இதுவரை இவர் வைத்த எந்த கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் சமீபத்தில் கோவில்பட்டி பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக வீடு பலத்த சேதமடைந்து எந்நேரமும் இடிந்து விழும் சூழ்நிலையில் உள்ளது. தனது வீடு சேதமடைந்தது குறித்து அரசு அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் ஆத்திரமடைந்தால் கடல்பாண்டி, தனது மாற்றுத்திறனாளி அட்டை, தனது குடும்ப அட்டை, அவர் மற்றும் அவரது மகன் ஆதார் கார்டு , பான்கார்டு உள்ளிட்டவைகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தார். 8 ஆண்டுகளாக தொடர்ந்து மனு அளித்தும் அரசு அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என்பதால் இனி அரசு வழங்கிய எதுவும் தனக்கு தேவையில்லை என்று ஒப்படைத்தாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து கடல்பாண்டி கூறுகையில் மாற்றுத்திறனாளியான நான் என்னுடைய வாழ்வதற்த்திற்கு தான் அரசிடம் கோரிக்கை வைத்தேன் நிறைவேற்ற வில்லை. இந்த சூழ்நிலையில் எனது மனைவி நிர்மலா மற்றும் எனது பெண் குழந்தையை அரசு மருத்துவர் ஒருவர் (குருசாமி) கடத்தி எங்கோ மறைத்து வைத்துள்ளார். இது தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை, எனது மனைவி, குழந்தை காணமால் போய் 3 ஆண்டுகளாகி விட்டது. இந்த சூழ்நிலையில் சேதமடைந்த தனது வீட்டினை சீரமைத்து தாருங்கள் அல்லது இலவச வீட்டுமனைப்பட்டா தாருங்கள் என்று கடந்த 8 ஆண்டுகளாக ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் மனு அளித்து நடையாய் நடந்து கொண்டு இருப்பதாகவும், ஆனால் அரசு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, தற்பொழுது தான் குடிநீர் விநியோகம் செய்து வரும் ஆட்டோவில் தான் பல நேரம் தனது மகனுடன் வசிக்கும் நிலையில் இருப்பதாகவும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் , தனது மாற்றுத்திறனாளி அட்டை, தனது குடும்ப அட்டை, அவர் மற்றும் அவரது மகன் ஆதார் கார்டு , பான்கார்டு உள்ளிட்டவைகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தது விட்டதாகவும், நான் இந்த நாட்டில் பிறக்கவில்லையா ? அரசு இனியும் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கட்டுக்கட்டாய் கோடிக்கணக்கில் பணம் ..போலீசை அலறவிட்ட லாட்டரி நாகராஜ்..!


இது குறித்து வருவாய்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, அவருடைய கோரிக்கை மனு குறித்து பரீசிலனை செய்து வருவதாகவும், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். அவருடைய மனைவி, மகள் தொடர்பாக கடல் பாண்டி கொடுத்த புகார் தொடர்பாக ஏற்கனவே பேசி முடிக்கப்பட்டு விட்டதாகவும், இனி புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மனைவி, மகளின் நிலைமை என்னவென்று தெரியமால் ஒரு புறம், எந்நேரமும் இடிந்து விழும் வீடு மறுபுறம், தனது 10 வயது மகனை வைத்து கொண்டு ஆட்டோவில் குடும்பம் நடத்தி வரும் மாற்றுத்திறனாளி கடல்பாண்டியின் துயர் துடைக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் அனைவரின் கோரிக்கை...

இதையும் படிங்க: 21 முறை விளக்கம் கொடுத்துருகேன்..!! இரட்டை வேடம் போடும் தி மு க ஸ்டாலின் : ஜெய்சங்கர் கடும் தாக்கு

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share