மகா கும்பமேளாவில் புனித நீராடிய லக்ஷ்மி ராய்..! போஸ்ட் போட்டு பெருமிதம்..!
பிரபல முன்னணி நடிகையான லக்ஷ்மி ராய், மகா கும்பமேளாவில் கலந்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் ஒரே இடமான திரிவேணி சங்கம், உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ளது. இப்பகுதியில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் மகாகும்பமேளா நிகழ்ச்சி, கடந்த மாதம் 13ம் தேதி தொடங்கியது. 45 நாட்கள் நடைபெற்று வந்த மகா கும்பமேளா நிகழ்ச்சியில் இதுவரை, ஜனாதிபதி திரௌபதி முர்மூ, பிரதமர் மோடி, அமித்ஷா, முகேஷ் அம்பானி, ஆந்திர பவன் கல்யாண், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, என பல சினிமா நட்சத்திரங்கள் முதல் பிரபலங்கள் வரை புனித நீராடி வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகை தமன்னா படத்தின் டீசர் மகா கும்பமேளாவில் வைத்து வெளியிடப்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது, இவருக்கு அடுத்தபடியாக பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் கடைசியாக கும்பமேளாவில் புனித நீராடினார். அவரைத் தொடர்ந்து தற்பொழுது பிரபல நடிகையான லக்ஷ்மிராய் மகா கும்பமேளாவில் புனித நீராடிஇருக்கிறார்.
இதையும் படிங்க: கும்பமேளாவில் வெளியானது மந்திரவாதி தமன்னாவின் ஓடேலா 2 டீசர்....! பேய் பிசாசுடன் சுற்றும் கதாநாயகி..!
நடிகை லட்சுமி ராய், 2005ம் ஆண்டு வெளியான "கற்க கசடற" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார், அடுத்து 'குண்டக்க மண்டக்க, தர்மபுரி, நெஞ்சத்தைத் தொடு, ரகசிய ஸ்நேகிதனே, தாம் தூம், காஞ்சனா' உள்ளிட்ட படங்களில் தனது நடிப்பை வெளிகாட்டியவர்.
தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தனது புகைப்படத்தை பகிர்ந்து வரும் லக்ஷ்மிராய், தற்போது மகா கும்பமேளாவில் புனித நீராடிய புகைப்படத்தை வெளியிட்டு, அதன் கீழ்" கண்டிப்பாக சொல்ல வேண்டும்.. இந்த வாய்ப்பையும் அனுபவத்தையும் இன்று மகா கும்பத்தில், மகா சிவராத்திரியின் சிறப்பு நாளில் இங்கு வருவதை தனது பாக்கியமாக உணர்கிறேன்" என்று பதிவிட்டு உள்ளார்.
சிவப்பு நிற உடையில் நெற்றியில் குங்குமத்துடன், புனித நீராடி மிகுந்த பொலிவுடன் இருக்கிறார் லட்சுமி ராய்.
கழுத்தில் மாலை, கையில் புக்ககள், நெற்றியில் எழுத்துக்கள் முழு பக்தி பரவசத்தில் லட்சுமி..
கையில் பூவுடன் தனது வேண்டுதலை கடவுளிடம் முன்வைத்தார் லட்சுமி ராய்.
கடைசியாக தனது இருக்கைகளை கூப்பி, வானத்தை ஏறெடுத்து நன்றி கூறினார் லக்ஷ்மி ராய். இவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், ஆன்மீக ரீதியாகவும் கவர்ச்சி ரீதியாகவும் எப்பொழுதும் லட்சுமி ராய் அழகுதான் என்று பதிவிட்டு வருகின்றனர்
இதையும் படிங்க: பயந்தா நாங்க பொறுப்பில்ல.. கும்பமேளாவில் திகிலூட்டும் திரில்லர் டீசர்..! மச்சக்காரி தமன்னாவ மந்திரவாதி ஆக்கிட்டியே டேரக்டரு..!