நடிகர் யோகி பாபுக்கு என்ன ஆனது? விபத்து குறித்து அவரே விளக்கம்!
நடிகர் யோகி பாபு விபத்தில் சிக்கியதாக நேற்று வெளியான தகவலை தொடர்ந்து, தற்போது இதுகுறித்து அவரே தன்னுனடய விளக்கத்தை கொடுத்துள்ளார்.
காமெடி நடிகராகவும் - கதையின் நாயகனாகவும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் யோகி பாபு, சென்னையில் இருந்து பெங்களூருக்கு ஷூட்டிங் செல்லும் போது அதிகாலை 3 மணியளவில் வாலாஜா பேட்டை அருகே விபத்தில் சிக்கியதாக கூறப்பட்டது. இந்த செய்தி தமிழ் திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எனினும் இந்த விபத்தில், யோகி பாபுவுக்கு இந்த காயமும் இல்லை. கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது மோதியதால் கார் தான் சேதமடைந்ததாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து யோகி பாபு தன்னுடைய தரப்பில் இருந்து, இந்த விபத்து குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள நடிகர் யோகி பாபு, “எனக்கு எந்தவித விபத்தும் ஏற்படவில்லை, நான் நலமாக இருக்கிறேன். தற்போது ஒரு படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறேன். அந்த படப்பிடிப்புக்காக வந்திருந்த ஒரு கார் விபத்தில் சிக்கியது. அந்த காரில் நானும், என் உதவியாளரும் பயணிக்கவில்லை. ஆனால், நானும், என் உதவியாளரும் அந்த காரில் சென்று விபத்தில் சிக்கி காயமடைந்ததாக தவறான தகவல்கள் பரவி வருகிறது. அது முற்றிலும் தவறு, என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதையும் படிங்க: விபத்தில் சிக்கிய நடிகர் யோகிபாபு.. அதிர்ஷடவசமாக உயிர் தப்பியதால் மகிழ்ச்சி..!
இந்த விசயம் அறிந்து என் நண்பர்கள், திரை பிரமுகர்கள், ரசிகர்கள், பத்திரிகையாளர்கள் என பலர் என்னை தொடர்பு கொண்டு நலம் விசாரித்து வருகிறார்கள். என் மீது அக்கறை கொண்ட அவர்கள் அனைவருக்கும் இந்த சமயத்தில் என் அன்பு கலந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கிறிஸ்டியன் வெட்டிங் உடையில் கீர்த்தி சுரேஷ் - அவரே பகிந்த புகைப்படங்கள் !