ஹனி மூன் போன இடத்தில் கணவரை கழட்டிவிட்டுட்டு ரம்யா பாண்டியன் கொடுத்த முத்தம் யாருக்கு தெரியுமா?
கணவரை கழட்டி விட்டு விட்டு மாடர்ன் ட்ரெஸ்ஸில் வளையவளைய போஸ் கொடுத்து வியக்க வைத்துள்ளார்.
நடிகை ரம்யா பாண்டியன் கணவருடன் தற்போது, ஹனி மூன் சென்றுள்ள நிலையில்.... கணவரை கழட்டி விட்டு விட்டு மாடர்ன் ட்ரெஸ்ஸில் வளையவளைய போஸ் கொடுத்து வியக்க வைத்துள்ளார்.
பக்கா தமிழச்சியான, ரம்யா பாண்டியன் இப்போது வடநாட்டு மருமகளாக மாறியுள்ளார். லோவல் தவான் என்பவரை கடந்த ஒரு வருடமாக ரம்யா பாண்டியன் காதலித்து வந்த நிலையில், நவம்பர் 8-ஆம் தேதி இருவருக்கும் ரிஷிகேஷில் உள்ள கங்கை நதிக்கரையோரம் மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்தது.
ரிஷிகேஷில் திருமணம் என்பதால், ரம்யா பாண்டியன் திருமணத்தில் அவரின் உறவினரான சித்தப்பா அருண் பாண்டியனின் குடும்பம் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். லோவல் தவான் குடும்பத்தில் இருந்தும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை ஆசீர்வதித்தனர்.
இதையும் படிங்க: 'கை, கால், கிட்னி ஏதாவது போச்சா..?' ஒரே நாளில் சிதைத்து விட்ட முதல்வர்..! கொன்னுட்டீங்களே சார்... அல்லு அர்ஜூன் வேதனை
திருமணம் மிகவும் எளிமையாக நடந்திருந்தாலும், ரம்யா பாண்டியனின் திருமண வரவேற்பு சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. இதில், தமிழ் சினிமாவை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். அதே போல் ரம்யா பாண்டியனின் விஜய் டிவி நண்பர்கள், மற்றும் பிக்பாஸ் நண்பர்கள் கலந்து கொண்டு களைகட்ட செய்தனர். இதுகுறித்த புகைப்படங்களை ரம்யா பாண்டியனே வெளியிட்டார்.
திருமணத்திற்கு பின்னர் ரம்யா பாண்டியன் முழுமையாக திரையுலகை விட்டு விலக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலுக்கு ஏற்ப ரம்யா பாண்டியனும் இதுவரை எந்த ஒரு புதிய படங்களிலும் கமிட் ஆகவில்லை.
கடந்த ஒரு மாதமாக கணவருடன் எடுத்து கொண்ட, போஸ்ட் வெட்டிங் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிளுகிளுப்பாக்கி வந்த ரம்யா பாண்டியன் இப்போது, கணவர் லோவல் தவானுடன் பாங்காங்குக்கு ஹானி மூன் சென்றுள்ளார்.
அப்போது கணவரை கழட்டி விட்டுவிட்டு, செம்ம கூலாக அங்கிருக்கும் இடங்களில் நின்று விதவிதமாக போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதோடு அங்கிருந்த நாய் குட்டிகள் மேல் அன்பை பொழிந்து அவற்றிக்கு முத்தமும் கொடுத்துள்ளார் புது பொண்ணு ரம்யா பாண்டியன்.
இதையும் படிங்க: கங்குவா வாங்கிய அடி... கோட்டை விட்ட‘கோட்...’ டிக் அடித்த அஜித்?.. மீண்டும் இணைகிறதா மாஸ் கூட்டணி?