×
 

இது என்.டி.ஏ கூட்டணி இல்ல!!எடப்பாடி கூட்டணி..! அல்லு கிளப்பும் அதிமுக ஆதரவாளர்கள்

பாஜகவின் எந்த நிபந்தனைக்கும் கட்டுப்படாமல் கூட்டணி வைத்திருக்கும் சாமர்த்தியம் கொண்ட அரசியல் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி என அதிமுகவினர் புங்காகிதம் அடைகின்றனர்.

பாரதிய ஜனதா கட்சி அதிமுக இடையான புதிய கூட்டணி எடப்பாடி பழனிச்சாமி கிடைத்த மாபெரும் வெற்றியென அவரது ஆதரவாளர்களும் பத்திரிகையாளர்கள் சிலரும் மார்தட்டி பெருமையோடு பேசி வருகிறார்கள்.ஆளும் திமுக மற்றும் அதனுடைய கூட்டணி கட்சிகள் அதிமுகவையும் எடப்பாடி பழனிச்சாமியையும் அடிமை என்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு கட்சியை தாரை வார்த்து விட்டார்கள் என்றும் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்கள்.

 காரணம் பிஜேபியுடன் கூட்டணி வைக்கும் அனைத்து கட்சிகளும் விரைவில் காலியாகிவிடும் இதுதான் அரசியல் வரலாறு என அவர்கள் பல விஷயங்களை சுட்டிக்காட்டி வருகிறார்கள். இந்த நிலையில் தான் தற்போது பாஜக - அதிமுக கூட்டணி தமிழகத்தில் அமைந்துள்ளது. இந்திய அளவில் அனைத்து தலைவர்களுக்கும் தண்ணி காட்டி வரும் அரசியல் சாணக்கியர் என கூறப்படும் அமித்ஷா பலமுறை எடப்பாடி பழனிச்சாமியை தொடர்பு கொண்டும் சந்திக்க முடியாமல் தோல்வியிலேயே முடிந்தது.

இதையும் படிங்க: 5 ஆண்டுகள் தாலி கட்டிக்கொண்ட திமுக... அதிமுகவுக்கு 2 மாத அட்ஜெஸ்ட்மெண்ட்தான்: பழ.கருப்பையா பொளேர்..!

தற்போது நீண்ட நெடிய பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுகவினரை சமாதானம் செய்து கூட்டணிக்கு சம்மதிக்க வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும் கடைசி வரை எடப்பாடி..அமித்ஷா மற்றும் மோடியை பதற்றத்திலேயே வைத்திருந்ததாக கூறப்படுகிறது.  சமீபத்தில் நடைபெற்ற சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டல் சந்திப்பு மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழகத்தில் எடப்பாடி தலைமையில் கூட்டணி அமித்ஷா அறிவித்ததில் இருந்து எதிர்க்கட்சிகள் ஆடிப் போயின. இதைத்தான் பிரபல அரசியல் விமர்சகர் பாண்டியன் தனது பேட்டியில் இது என் டி ஏ கூட்டணி அல்ல எடப்பாடி கூட்டணி என வர்ணனை செய்துள்ளார்.

 இதேபோன்று அதிமுக தொண்டர்கள் மற்றும் சமூக வலைதள உறுப்பினர்கள் மீம்ஸ்கள் மூலமாக தெறிக்க விட்டு வருகின்றனர். அதாவது பாஜகவின் எந்த நிபந்தனைக்கும் கட்டுப்படாமல் தங்கள் நிலையிலிருந்து கீழே இறங்கி விடாமல் கூட்டணி அமைத்திருக்கும் சாமர்த்தியம் எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டுமே உண்டு என புலங்காகிதம் அடைந்து வருகின்றனர்.

 உண்மையில் எந்த ஒரு சினிமா பின்புலமோ மிகப்பெரிய அளவிலான வசீகரமான விஷயங்களோ இல்லாத தனி மனிதரான எடப்பாடி பழனிச்சாமி உள்ளூர் அரசியல் எதிரிகள் மற்றும் தேசிய அளவிலான அழுத்தம் ஆகியவற்றை கடந்து தன்னை மையப்படுத்தி அரசியலைக் கொண்டு செல்வது சாமர்த்தியமான விஷயம் தான் என்பதில் எந்த ஐயமும் இல்லை

இதையும் படிங்க: முதல்வரே இன்னும் ஒரு வருஷம் ஆட்டம் போடுங்க.. திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும் பாஜக - அதிமுக கூட்டணி.. நயினார் நாகேந்திரன் சரவெடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share