அரசியல்ல இதெல்லாம் சாதாரணப்பா... திமுக Vs பாஜக பஞ்சாயத்துக்கு கடம்பூர் ராஜு ’நச்’ பதிலடி...!
கோ பேக் மோடி Vs கெட் அவுட் ஸ்டாலின் என திமுகவும், பாஜகவுக்கு மாற்றி மாற்றி சோசியல் மீடியாவில் பரபரப்பு கிளப்பி வரும் நிலையில், இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பதிலடி கொடுத்துள்ளார்.
கோ பேக் மோடி Vs கெட் அவுட் ஸ்டாலின் என திமுகவும், பாஜகவுக்கு மாற்றி மாற்றி சோசியல் மீடியாவில் பரபரப்பு கிளப்பி வரும் நிலையில், இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பதிலடி கொடுத்துள்ளார்.
திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது ஒவ்வொரு முறை பிரதமர் மோடியின் தமிழக வருகையின் போதும் கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேக்கை உலக அளவில் ட்ரெண்டு செய்து பாஜகவினரை வெறுப்பேற்றினர். குறிப்பாக மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு பலூன்களை பறக்கவிடுவது, கருப்புக்கொடி காட்டுவது என பல்வேறு அட்ராசிட்டிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசுக்கும், பாஜகவின் மத்திய அரசுக்கும் இடையே மொழிக் கொள்கை தொடர்பான சிக்கல் வெடித்துள்ளது. தமிழ்நாடு அரசு இரு மொழிக் கொள்கையையும், மத்திய அரசு மும்மொழிக் கொள்கையையும் முன்னிலைப்படுத்தி சர்ச்சையில் ஈடுபட்டு வருகின்றன. தமிழக அரசின் இருமொழிக் கொள்கையை எதிர்க்கும் வகையில் பேசி வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கெட் அவுட் ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டு செய்து வருகிறார். இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு 26 சீட்டுதான் கிடைக்கும்.. பொசுக்குன்னு சொன்ன பெங்களூரு புகழேந்தி.!
சாத்தூர் அருகே ஒ.மேட்டுபட்டி கிராமத்தில் அதிமுக ஒன்றிய செயலாளரின் தந்தை 16 வது நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இரு மொழி கொள்கைதான் எங்கள் உயிர் மூச்சு என்ற நிலைப்பாட்டில் அதிமுக உள்ளது.
திமுகவினர் நடத்தும் கல்வி கூடங்களில் மும்மொழி அமல்படுத்தி வருகிறார்கள்.ஆனால் இன்று அரசியலாக்கி இருமொழி கொள்கைதான் எங்கள் கொள்கை என பேசி கபட நாடகம் ஆடுகிறார்கள். திமுக ஆட்சியாளர்களின் அவலத்தை மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள்.2026 சட்டமன்றத் தேர்தலில் இது எதிரொலித்து திமுக ஆட்சி வீட்டிற்கு சென்றால் தான் எனக்கு விடிவு காலம் என்ற மனநிலை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
திமுகவினர் எதிர்க்கட்சியாக இருந்தபோது “கோ பேக் மோடி” என்று சொன்னார்கள், ஆனால் ஆளும் கட்சியாக இருக்கும் போது வெள்ளைக்குடை பிடித்து மோடியை வரவேற்கிறார்கள். திமுகவின் செயலுக்கு இன்று பாஜகவினர் “கெட் அவுட் ஸ்டாலின்” என எதிர் வினையாற்றுகிறார்கள். இது இயல்பானதுதான் என்றார்.
இதையும் படிங்க: சிரிப்பு போலீஸ் மாதிரி அவரு சிரிப்பு அரசியல்வாதி.. யாரைக் கலாய்க்கிறார் ஓ. பன்னீர்செல்வம்..?