×
 

அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீதான ஆள்கடத்தல் வழக்கு.. 6 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க உத்தரவு..!

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ராஜவர்மன் மீதான வழக்குகளை ஆறு மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகாசி சக்தி நகரைச் சேர்ந்தவர் தொழிலதிபர் கம்மாபட்டி ரவிச்சந்திரன். இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு  சாத்தூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ராஜவர்மன், தங்கமுனியசாமி, நரிக்குடியைச் சேர்ந்த ஐ.ரவிச்சந்திரன் ஆகியோருடன் சேர்ந்து வேண்டுராயபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையை விலைக்கு வாங்கி நடத்தி வந்தனர். இதன் பிறகு, 2019-ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் ராஜவர்மன் உள்ளிட்ட மூவரும் தங்களின் பங்குத் தொகையைப் பெற்றுக் கொண்டு தொழிலில் இருந்து விலகினார்.

இந்த நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் ரவிச்சந்திரனை கடத்தி ராஜவர்மன் உள்ளிட்டோர் 2 கோடிரூபாய்  கேட்டு மிரட்டியதாக ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம், முன்னாள் அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன், அதிமுக நிர்வாகி தங்கமுனியசாமி நரிக்குடி ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவர் ஐ.ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டிருந்தது.

இதையும் படிங்க: அதிமுகவுடன் கூட்டணி இல்லை- விஜய் திட்டவட்டம்..! திமுக vs தவெக-வாக மாறும் அரசியல் களம்..!

அதன்படி ஆள் கடத்தல், மிரட்டிப்பணம் பறித்தல், கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் ராஜவர்மன் உள் ளிட்டோர் மீது ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகையை போலீசார் கடந்த 2024 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தாக்கல் செய்தனர். 

இந்த நிலையில் புகார்தாரரான ரவிச்சந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கில், இந்த வழக்கு விசாரணையில்  தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆஜராவதில்லை  என்றும் வழக்கு விசாரணை காலம் தாமதமாக நடைபெறுகிறது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் தன் மீதான புகாரை திரும்ப பெறும்படி தன்னை வலியுறுத்தி வருவதாகவும் எனவே இந்த வழக்கு விசாரணையை உடனடியாக விசாரித்து முடிக்க ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றத்தில் உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு நடைபெற்றது.. வழக்கை விசாரித்த நீதிபதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன் உள்ளிட்டவர் மீதான வழக்கை ஆறு மாதத்திற்கு விசாரித்து முடிக்க வேண்டும் என்று கெடு விதித்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அதீத கவன சிதறல்... உளறிக் கொட்டும் திண்டுக்கல் சீனிவாசன்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share