×
 

அதிமுக எம்எல்ஏக்கள் ஒரு நாள் சஸ்பெண்ட்.. கவன ஈர்ப்பு தீர்மான விவகாரத்தில் கூச்சல், குழப்பம்..!

அதிமுக எம்எல்ஏக்கள் இன்று ஒருநாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவு பிறப்பித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது பேச அனுமதி மறுக்கப்பட்டதால் அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவையில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டனர். மேலும் இன்று ஒருநாள் அதிமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவு பிறப்பித்தார்.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் வினாவிடை நேரத்திற்கு பிறகு மானியக்கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது. அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மதுரை உசிலம்பட்டி அருகே காவலர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார்.  சபை விதிகளின்படி கவன ஈர்ப்புத் தீர்மானத்தை முன்கூட்டியே கொடுக்க வேண்டும் என்றும் அதன்பிறகே அது பரிசீலிக்க எடுத்துக்கொள்ளப்படும் என்று சபாநாயகர் அனுமதி அளிக்க மறுப்புத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ரீல்ஸ் வெறி தலைக்கேறிய சப்- இன்ஸ்பெக்டர்..! அதிரடியாக வெளியே தூக்கி அடித்த மாவட்ட எஸ்.பி!!

இதையடுத்து இருக்கைகளில் இருந்து எழுந்து சபாநாயகருக்கு எதிராக அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். கையை நீட்டி ஏன் பாரபட்சத்துடன் நடந்து கொள்கிறீர்கள் என முழக்கங்களை எழுப்பினர். அவை மரபை மீறிவிட்டு ஆத்திரப்பட்டு பிரயோஜனம் இல்லை என்று சபாநாயகர் அப்பாவு மீண்டும் விளக்கமளித்தார். கடந்த ஆட்சியின் போது அப்போதைய சபாநாயகர் தனபால் எவ்வாறு அவையை நடத்தினாரோ அப்படித்தான் அதே விதிகளின்படி தான் இப்போதைய சபாநாயகர் அப்பாவு அவையை நடத்துவதாக அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சபாநாயகரைப் பார்த்து கையை நீட்டி பேசுவது சட்டப்பேரவைக்கு அழகல்ல என்று கூறினார். ஒரு சம்பவம் நடைபெற்றால் அதனை டிவியைப் பார்த்து தெரிந்து கொண்டதாக நான் சொல்ல மாட்டேன் என்று அதிமுகவை விமர்சித்தார் முதலமைச்சர். ஆனால் இதனை ஏற்க மறுத்த அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். 

இதையடுத்து அதிமுக எம்எல்ஏக்களை அவையில் இருந்து வெளியேற்றும்படி சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். அவர்கள் வெளியேறிய உடன், சட்டப்பேரவையின் மாண்புக்கு நற்பெயரை ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்ட அதிமுக உறுப்பினர்கள் நாள்முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். 


 

இதையும் படிங்க: சபாநாயகருக்கு எதிராக தீர்மானம்.... காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு என்ன? 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share