×
 

பெண்களிடம் துடைப்பத்தால் அடி வாங்கிய அதிமுக நிர்வாகியை தூக்கியடித்த எடப்பாடி பழனிசாமி! 

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியைச் சேர்ந்தவர் பொன்னம்பலம் என்பவர்  அதிமுகவின் எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளராகவும் பதவி வகித்து வந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியைச் சேர்ந்தவர் பொன்னம்பலம் என்பவர்  அதிமுகவின் எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். இத்தகைய சூழலில் தான் இவர் தனது மேல் மாடியில் உள்ள வீட்டைத் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளார். இதனால் அவ்வப்போது அந்த பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பெண்கள் கடந்த டிசம்பர் மாதம் இந்த வீட்டை காலி செய்து விட்டு வேறு இடத்திற்கு குடி போயுள்ளனர்.

அதன் பின்னரும் அந்த பெண்களின் வீட்டிற்குச் சென்று பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் ஒன்றிணைந்து அதிமுக நிர்வாகியை துடைப்பத்தால் அடி வெளுத்துள்ளனர். இதுதொடர்பான காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலானது. 

இதையும் படிங்க: திமுக கொடி குற்றம் செய்வதற்கான லைசன்ஸா? - கொதித்தெழுந்த எடப்பாடி பழனிசாமி! 

இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார். இந்த புகாரை விசாரித்த போலீசார் பொன்னம்பலத்தைக் கைது செய்தனர். இதனையடுத்து போலீசார் அவர் மீது பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் அதிமுகவில் இருந்து பொன்னம்பலம் நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்குக் களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவரும், குன்றத்தூர் மேற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளருமான பொன்னம்பலம், இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். எனவே கட்சித் தொண்டர்கள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 


 
 

இதையும் படிங்க: இனி தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான்.. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடி கணிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share