×
 

அதிமுக - பாஜக கூட்டணி சர்ச்சை; மே 2-ஆம் தேதி இபிஎஸ் அதிரடி அறிவிப்பு...!

வரும் மே 2ம் தேதி சென்னையில் அதிமுக செயற்குழு கூடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

அதிமுக பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்திருக்கிறது. இதற்கு அதிருப்தி தெரிவிக்கும் வகையில் ஆங்காங்கே அதிமுக நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக கூட்டணி அறிவிப்பிற்கு முன்னதாக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை நடத்தி முடிவெடுத்திருக்க வேண்டும் என்ற அதிருப்தி நிலவுவதாகக் கூறப்படுகிறது. மேலும் அதிமுகவைப் பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் ஏற்கனவே எழுந்து வருகின்றன. 

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தற்பொழுது அதிமுக  கட்சியினுடைய செயற்குழு கூட்டத்தை கூட்டவுள்ளது. மே மாதம் 2ம் தேதி மாலை 4:30 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் இருக்கக்கூடிய அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்திற்கு அதிமுகவுடைய சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள்,  தலைமைக்கழக குழு உறுப்பினர்கள் பங்கேற்குமாறு தனித்தனியாக அழைப்பு விடுக்கப்படும். மேலும் இந்த செயற்குழு கூட்டத்தில் மிக முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: அமித் ஷா முன் ஆடிட்டர் போட்ட வீடியோ கால்… வழிக்குக் கொண்டுவரப்பட்ட இ.பி.எஸ்..!

அதிமுக உடைய இந்த செயற்குழு கூட்டத்தில் தற்பொழுது பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்பட்டிருக்கக்கூடிய சூழலில் பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதலங்களில் பரவி வருகின்றன. குறிப்பாக அதிமுக பாஜக கூட்டணி சேர்ந்திருப்பதால் தற்பொழுது இந்த கூட்டணிக்கு வலு சேர்ந்திருப்பதாகவும் , அதிமுக உடைய வாக்கு வங்கி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி உடைய வாக்கு வங்கி இரண்டும் சேரும் பொழுது 2026 தேர்தலில் மிகப்பெரிய  தாக்கத்துடன் பெரிய அளவிலான வெற்றி கிடைக்கக்கூடும் என சிலர் கருதுகின்றனர். 

அதே நேரத்தில் அதிமுக நிர்பந்தத்தினால் தான் பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதாகவும், இதனால் 2026ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு மிகப்பெரிய தாக்கத்தை அக்கட்சி எதிர்கொள்ளும் என்றும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இதனிடையே அதிமுக அவை தலைவர் தமிழ்மகன் உசேனுடைய முன்னிலையில் செயற்குழு கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது. 
 

இதையும் படிங்க: இரட்டை இலை சின்­னத்­துக்காக இரையாகிப்போன எடப்பாடியார்… காலை வாரக் காத்திருக்கும் 3 சிக்கல்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share