ED ரெய்டுக்கு பயந்து பாஜகவுடன் கூட்டணியா..? திமுகவை மடக்கியடித்த ஜெயக்குமார்..!
அடுத்த கட்சி கூட்டணியை பற்றியும் ஊழலைப் பற்றியும் பற்றி பேசுவதற்கு அவர்களுக்கு அருகதை இல்லை
அமலாக்கத்துறைக்கு பயந்துதான் அதிமுக பாஜகவுடன் கூட்டணிக்கு ஒப்புக்கொண்டதாக ஸ்டாலின் தெரிவித்துள் இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயகுமார், "ஊழலை பற்றி பேச அவர்களுக்கு அருகதை இல்லை" எனப் பதிலடி கொடுத்துள்ளார்.
செய்தியாளர்களிட்ம் பேசிய ஜெயகுமார், ''நேற்றைய தினம் கட்சி சார்பில் வந்த அறிக்கையை பார்த்திருப்பீர்கள். எனவே நான் அதற்குள்ளாக போக விரும்பவில்லை. ஆனால், திமுகவை பொறுத்தவரை ஒரு ஒரு ரெய்டு என்றாலே முழுக்க முழுக்க அது 2ஜி ஸ்பெக்ட்ரத்தில் இருந்து அது இமாலய ஊழல். இந்தியாவே தலைகுனிகிற இமாலய ஊழல் அது.
இதையும் படிங்க: Out of contact-ல் மு.க.ஸ்டாலின்... தமிழக மக்களுக்கு அச்சுறுத்தல்: அண்ணாமலை ஆத்திரம்..!
ஒவ்வொரு தமிழனும் வெட்கப்பட கூடிய வகையில் அந்த ஊழல் அமைந்தது. அப்படியெல்லாம் ஊழல் செய்த அவர்கள் தன் முதுகை திரும்பி பார்க்க வேண்டும். அடுத்தவர்களை குற்றம் சாட்ட வேண்டும் என்று சொன்னால் முதலிலேயே தன் முதுகை திரும்பி பார்க்க வேண்டும். அப்படி ஊழலில் ஊற்றுக்கண், ஊழலை தமிழ்நாட்டிலேயே திமுகதான் அறிமுகப்படுத்தியது.
அது மட்டுமல்லால் பல்வேறு வழக்குகளில் சிக்கி அதன் அடிப்படையில் அந்த வழக்குகள் எல்லாம்கூட டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடந்ததெல்லாம் நிச்சயமாக உங்களுக்கு தெரியும். அந்த வகையில் அடுத்த கட்சி கூட்டணியை பற்றியும் ஊழலைப் பற்றியும் பற்றி பேசுவதற்கு அவர்களுக்கு அருகதை இல்லை என்பதை நான் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
ஊழலை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியது கருணாநிதி ஆட்சிக் காலத்தில் தான். அதன் பிறகு தொடர்ச்சியாக இன்றைக்கு ஸ்டாலின் ஆட்சியிலும் சரி, ஊழல் கொடி உச்சக்கட்டத்திலேயே பறக்கின்ற சூழ்நிலை இன்றைக்கு தமிழ்நாட்டில் உள்ளது. தமிழநாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுமையும் ஊழல் கொடி உச்சகட்டத்தில் பறக்கிறது என்று சொன்னால் அது இந்த திமுகவின் ஆட்சியின் ஊழல் கொடிதான்'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நாங்கள் சந்தர்ப்பவாத கூட்டணி அல்ல.. வெற்றி கூட்டணி.. நயினார் பதிலடி..!