×
 

நீங்க ஓட்டுவதற்கு நானும் எடப்பாடியாரும்தான் கிடைச்சோமா..? அண்ணாமலை ஆவேசம்..!

உட்கார்ந்து பத்திரிகையில் ஒரு காலம் எழுதுகிறார்கள். அதைத் தவிர அரசியல் விமர்சிகர்களுக்கு வேறு என்ன தெரியும்?

''அதிமுக என எங்கேயும் நான் குறிப்பிடவில்லையே..? அரசியல் விமர்சகர்களுக்கு என்ன தெரியும்..? பாஜகவை திட்டுவது தான் அவர்கள் வேலை..?'' என  அண்ணாமலை கடுமையாக சாடினார்.

''பாஜகவுடன் கூட்டணி சேர தவமிருக்கிறார்கள் நோட்டா கட்சி, அவர்களுடன் கூட்டணி வைத்ததால் தான் நாங்கள் தோற்றோம் என கூறிய கட்சிகள் பாஜகவுடன் கூட்டணிக்கு தவமிருக்கின்றன'' என அண்ணாமலை தெரிவித்து இருந்தார்.

 

இதற்கு பதிலளித்துள்ள அண்ணாமலை, ''சேகர்பாபு ஆஸ்பத்திரி சேரவேண்டியவர். அவரெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார். எடப்பாடி பழனி சாமியும் நான் பேசியதைப் பற்றி பேசி இருக்கிறார். நான் அதிமுக எனச் சொன்னேனா?  வேலையில்லாத நான்கு பேரை கூப்பிட்டு வந்து விவாதம் நடத்த வேண்டும். நீங்களாக எடப்பாடி அதைச் சொன்னார்... அண்ணாமலை இதை சொன்னார் என்று நீங்கள் விவாதம் நடத்த வேண்டும். எடப்பாடி அண்ணன் தெளிவாகச் சொல்லி இருக்கிறார். நானும் தெளிவாக சொல்லி இருக்கிறேன்.

இதையும் படிங்க: அவமதிக்கும் அண்ணாமலை… கழறும் தேமுதிக..? சீமானுக்கு தூதுவிட்ட எடப்பாடி பழனிசாமி..!

நான் சொன்ன போது அதிமுக என்று குறிப்பிட்டேனா? உங்களுடைய செய்தி சேனல் ஓடுவதற்கு நானும் எடப்பாடி அண்ணனும்தான் கிடைத்தோமா? நீங்கள் நைட் ஓட்டுவதற்கு விவாதம் நடத்துவதற்கு நாங்கள்தான் கிடைத்தோமா?  இந்த அரசியல் விமர்சகர்கள், எந்த அரசியல் கட்சியிலும் இல்லாத   இரண்டு பேர் எனக் கொண்டு வந்து உட்கார வைத்து, ஏழு மணியிலிருந்து ஒன்பது மணி வரை விவாதம் நாங்கள்தான் கிடைத்தோமா? 

 நான் சொன்னதையும், அண்ணன் எடப்பாடி சொன்னதையும் திருப்பி திருப்பி செய்தி வெளியிடுகிறீர்கள். நான் நேற்று பேசியதில் அதிமுக என்று குறிப்பிட்டேனா? பாரதிய ஜனதா கட்சியின் நிலையைப் பற்றி நான் குறிப்பிட்டிருந்தேன். எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை பற்றி பேசுகிறார். நான் பவிவாதிகழ்ச்சி எல்லாம் எல்லாம் பார்ப்பதே கிடையாது. நீங்கள் நல்லவர்கள் (செய்தியாளர்கள்) உங்களுக்கு கிரவுண்டு லெவல் தெரியும். அவர்களுக்கு என்ன கிரவுண்ட் லெவல் தெரியும்? அரசியல் விமர்சகர் என்ற போர்வையில் போய் பாஜகவை திட்டுவதற்காக வேலையை விட்டு சில பேர் வந்திருக்கிறார்கள்.

அவர்களெல்லாம் யார்? அரசியல் விமர்சிகள் என்ற பெயரில் நடுநிலையாகவா பேசுகிறார்கள்? அவர்களுக்கு தமிழ்நாடு நல்ல நிலைக்கு வந்த விடக்கூடாது... திமுக ஜெயிக்க வேண்டும். எந்த மாதிரி கூட்டணி வர வேண்டும்? என்று அரசியல் விமர்சகரே முடிவு செய்கிறார்கள். அதற்கு எப்படி நானும், அண்ணன் எடப்பாடி அவர்களும் தொடர்ந்து பேச முடியும்? உட்கார்ந்து பத்திரிகையில் ஒரு காலம் எழுதுகிறார்கள். அதைத் தவிர அரசியல் விமர்சிகர்களுக்கு வேறு என்ன தெரியும்?'' எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.

இதையும் படிங்க: அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி... செந்தில் பாலாஜி ஆவேசம்....!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share