3000 ஐ.டி. ஊழியர்களுக்கு மொத்தமாக கல்தா கொடுத்த அமெரிக்க கம்பெனி - வரும் 31ம் தேதி காத்திருக்கும் முக்கிய முடிவு!
கோவையில் ஐடி ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக பணி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் வரும் 31 ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவையில் ஐடி ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக பணி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் வரும் 31 ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஐடி நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்கள் ஊழியர்களை ஒட்டுமொத்தமாக பணியிலிருந்து மின்னஞ்சல் அனுப்பி நீக்கியது. வை ஆர் எஸ் புரம் மற்றும் சுங்கம் பகுதியில் இயங்கி வந்த Focus Edumatics எனும் அமெரிக்காவை சார்ந்த ஐடி நிறுவனம் வெள்ளிக்கிழமை அன்று திடீரென மூடப்பட்டது.
இதனால் அங்கு பணிபுரியும் ஆயிரத்திக்ரும் மேற்பட்ட பணியாளர்கள் நேற்றைய தினம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு போராட்டம் நடத்தினர். கோவை தொழிலாளர் துறை அலுவலர் அலுவலகத்தில் திரண்ட பணியாளர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு கிடைக்க வேண்டிய பணப்பலன், சம்பளம் மற்றும் நிறுவனத்தில் அளித்துள்ள பள்ளி கல்லூரி அசல் ஆவணங்களை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதையும் படிங்க: ரஷ்யாவுடனான நட்பு... உள்நாட்டு உற்பத்தி… உலகையே மிரட்டும் இந்தியாவின் நவீன ராணுவம்..!
நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை அழைத்து எழுத்துப்பூர்வமாக தங்கள் கோரிக்கைகள் குறித்து கடிதம் பெற்று தர வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.உதவி தொழிலாளர் ஆணையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் தங்களுக்கு கிடைக்கப்பட வேண்டிய கிராஜுவிட்டி, ஒரு மாத சம்பளம் ஆகியவற்றை பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
ஆதரவாக CITU தொழிற்சங்கம், DYFI ஆகிய அமைப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதில் 31 ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தரம் குறையுமா? தடைபடுமா? - சர்ச்சையில் காலை உணவுத்திட்டம் - சென்னையில் வெடித்த சிக்கல்!