×
 

அமித் ஷாவுக்கு அதுதான் பொழப்பே... நயினார் நாகேந்திரனுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி...!

அமித்ஷா தான் அனைவரின் போனையும் ஒட்டுக் கேட்பார்: நயினார் நாகேந்திரனின் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி.பதிலடி

விருதுநகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எம்.பி.மாணிக்கம் தாகூர்,  பா.ஜ‌க.வினரின் போன் ஒட்டுக் கேட்கப்படுவதாக நயினார் நாகேந்திரனின் கூறிய குற்றச்சாட்டுக்கு
அமித்ஷா தான் அனைத்து போனையும் ஒட்டுக் கேட்பார் என பதிலளித்துள்ளார்.

அமைச்சர் பொன்முடி பேசியது பற்றிய கேள்விக்கு உடனடியாக தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். ஆனால், பாஜகவினர் தொடர்ந்து தமிழகத்திற்கு வஞ்சனை செய்து வருகின்றனர். 100 நாள் வேலைக்கான சம்பளத்தை கூட தர மறுக்கின்றனர். அப்படிப்பட்ட பாஜகவினர் பெண்களின் பாதுகாப்பு பற்றியோ, அவர்களின் உரிமைகள் பற்றியோ பேச எந்தவித உரிமையும் கிடையாது என்றார். 

தமிழக பாஜகவினரின்  செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுகிறது. கவனமாக பேசுங்கள் என நயினார் நாகேந்திரன்  கூறியுள்ளார் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், நயினார் நாகேந்திரன் மிகத் தெளிவாக கூறியுள்ளார். அமித் ஷா அனைவரின் செல்போனையும் ஒட்டுக் கேட்டுக் கொண்டு இருக்கிறார். அமித்ஷா வின் ஸ்டைலே ஒட்டுக் கேட்பது தான். அவர் குஜராத்தில் இருக்கும் போதும் அதைத்தான் செய்தார். இப்போது உள்துறை அமைச்சராக உள்ளார். இப்போதும் அதைத்தான் செய்கிறாரா? என நயினார் நாகேந்திரன் தான் தெளிவுபடுத்த வேண்டும். 

இதையும் படிங்க: அமித் ஷா இனி தமிழகத்துக்கு அடிக்கடி வருவார்.. பாஜக ஆட்சியும் வரும்.. ஒரு முடிவில் இருக்கும் நயினார்.!!

பெகசாசஸ் பிரச்சனை வெளி வந்ததற்கு காரணம் அமித்ஷா தான். 
ஒட்டுக் கேட்பதால் தான் கர்நாடகா, கேரளா, இமாச்சலப்பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய இடங்களில் தோல்வியை சந்தித்தார்கள்.தோல்வியை விலை கொடுத்து வாங்கினார்கள். பாஜகவை பொருத்தவரை தமிழகத்தை சீரழிக்க வந்த கட்சி.  கொள்ளையடிக்க வந்த கட்சி. தாழ்மைப்படுத்த வந்த கட்சி. மக்களைப் பொறுத்தவரை மிகத் தெளிவாக உள்ளனர். அக்கட்சிக்கு எப்போதும் தமிழகத்தில் இடம் இருக்காது.


 
திமுகவை நம்பி மட்டும் விசிக இல்லை எனத் திருமாவளவன் கூறியுள்ளாரே? என்ற கேள்விக்கு அந்த வீடியோவை முழுசா பார்த்தால் தெரியும். குறிப்பிட்ட ஒரு பகுதியை வைத்து பாஜகவினர் பிம்பத்தை கட்டமைக்க விரும்புகின்றனர் என்று தான் திருமாவளன் தெரிவித்துள்ளார்" என கூறினார்.

இதையும் படிங்க: அதிமுக - பாஜக கூட்டணி.. அதிமுகவுடன் உறவை முறித்த முக்கிய கட்சி.. அழிவு உறுதி என அதிமுகவுக்கு சாபம்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share