நடிகைக்கு பாலியல் தொல்லை... ஹோலி கொண்டாட்டத்தில் நிகழ்ந்த பரபரப்பு!!
ஹோலி பண்டிகையின் போது நடிகை ஒருவரை நடிகர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 14 ஆம் தேதி ஹோலி பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஒருபுறம் வண்ண சாயங்கள் பூசி மகிழ்ச்சியாக கொண்டாடினாலும் மறுபுறம் இந்த சூழலை பயன்படுத்தி சில பகுதிகளில் குற்றச்சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. குறிப்பாக வடமாநிலங்களில் இந்த பண்டிகையின் போது கைது, வன்முறை, தற்கொலை போன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன. அதில் ஒரு பகுதியில் நடிகை ஒருவரை நடிகர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின்போது, சக நடிகர் ஒருவர் சீரியல் நடிகை ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுக்குறித்து பாதிக்கப்பட்ட நடிகை போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், ஹோலி கொண்டாட்டத்தின்போது, நடிகர் குடிபோதையில் எனது எதிர்ப்பையும் மீறி வலுக்கட்டாயமாக என் மீது வண்ணம் பூசிவிட்டார். நான் மொட்டை மாடியில் இருந்த பானிபூரி கடைக்கு பின்னால் ஒளிந்து கொண்டேன், ஆனால் அந்த நடிகர் என்னையே பின்தொடர்ந்து வந்து என் மீது வண்ணம் பூச முயன்றார்.
இதையும் படிங்க: தார்ப்பாய்களால் மூடப்படும் மசூதிகள்.. சச்சரவுகளை தடுக்க உ.பி.அரசு நடவடிக்கை..!
நான் என் முகத்தை மூடினேன், ஆனால் அவர் என்னை வலுக்கட்டாயமாகப் பிடித்து என் கன்னங்களில் வண்ணம் பூசிவிட்டு, நான் உன்னை நேசிக்கிறேன், யார் உன்னை என்னிடமிருந்து காப்பாற்றுகிறார்கள் என்று பார்ப்போம் என்றார். பிறகு, அவர் என்னை தகாத முறையில் தொட்டு என் மீது வண்ணம் பூசினார். நான் அவரைத் தள்ளிவிட்டேன். நான் மனதளவில் அதிர்ச்சியடைந்து நேராக கழிப்பறைக்குள் சென்றுவிட்டேன் என்று குறிப்பிட்டிருந்தார். இது இந்தி திரைப்பட உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல் ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டம் புட்டபர்த்தி நகரில், ஒரு தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு கடந்த வெள்ளிக்கிழமை, மாணவிகள் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த போதி பள்ளியின் தலைமை ஆசிரியர் வெங்கடபதி, கொண்டாட்டம் என்ற பெயரில் மாணவிகளிடம் அத்துமீறி செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதனை பார்த்து மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் இதனை அக்கம்பக்கத்து வீடுகளில் வசிக்கும் பெண்கள் தங்கள் செல்போனில் பதிவு செய்து மாணவிகளின் பெற்றோர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். அதுமட்டுமின்றி போலீசில் புகார் அளித்துள்ளனர். இதை அடுத்து தலைமை ஆசிரியர் வெங்கடபதியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதேபோல் உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் உள்ள திரிகால்பூர் என்ற கிராமத்தை சேர்ந்த 30 வயது பெண் ஒருவர், ஹோலி பண்டிகையின்போது தனது மாமனாரின் முகத்தில் வண்ணப்பொடியை பூசியுள்ளார். இதை கண்ட பெண்ணின் மாமியார் மருகளை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மருமகள், தற்கொலை செய்துகொண்டார். விஷம் குடித்த அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும் சிகிச்சை பலனின்றி பெண் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், உயிரிழந்த பெண்ணின் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவ்வாறு ஹோலி பண்டிகையின் போது பல்வேறு பகுதிகளில் பல குற்றச்சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பப்ளிக் எக்ஸாம் ஹாலில் பாலியல் தொல்லை.. +2 மாணவியிடம் அத்துமீறிய ஆசிரியர்.. பரீட்சை எழுத முடியாமல் தவித்த மாணவி..!