×
 

ஏழு மலைகளும் திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தம்.. இதில் வணிகத்திற்கு இடமே கிடையாது.. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிரடி..!

ஏழுமலையான் கோயில் உள்ள ஏழு மலைகளும் தேவஸ்தானத்திற்கு சொந்தமானது. ஏழுமலையிலும் வணிக ரீதியான செயல்பாடுகளை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறினார்.

ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் பேரனும், அமைச்சர் நாரா லோகேஷ் மகனுமான தேவான்ஸ் பிறந்தநாளை ஒட்டி இன்று ஏழுமலையான் கோவிலில் முதலமைச்சர் சந்திரபாபு குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோயிலுக்கு உள்ளே உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் வேத பண்டிதர்கள், ஆசீர்வாதம் செய்து தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு, செயல் அதிகாரி ஷியாமலா ராவ், கூடுதல் செயல் அதிகாரி வெங்கைய்யா சௌத்ரி ஆகியோர் இணைந்து இந்த ஆண்டுக்கான டைரி காலண்டர் பஞ்சாங்கம் உள்ளிட்டவை வழங்கினர்.

இதனை அடுத்து முதல்வர் குடும்பத்தினர் திருமலையில் உள்ள தரிகொண்ட வெங்கமாம்பா அன்னப்பிரசாத கூடத்தில் பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் பரிமாறி அங்கு பரிமாறப்படும் உணவுகள் தரம் குறித்து கேட்டிருந்தனர். 

இதனை அடுத்து அங்கேயே முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குடும்பத்தினர் உணவு சாப்பிட்டனர். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பேட்டி அளித்தார். எனது ஆட்சி வந்தவுடன் ஆட்சி மாற்றத்தை திருப்பதியில் இருந்து தொடங்குவேன் என கூறினேன் அதன்படி முதல் முறையாக செயல் அதிகாரி ஷியாமலாராவை நியமனம் செய்து அதிலிருந்து எனது மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது.

ஏழுமலையான் கோயில் உள்ள ஏழு மலைகளும் தேவஸ்தானத்திற்கு சொந்தமானது. ஆனால் மலை அடிவாரத்தில் தேவலோகம், மும்தாஜ் போன்ற மூன்று ஹோட்டல் நிறுவனங்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் பெயர் மாற்றினாலும் மலை அடிவாரத்தில் உள்ள ஏழு மலைகளும் தேவஸ்தானத்திற்கு மட்டுமே சொந்தமானது. 

இதையும் படிங்க: பெண்கள் 2 குழந்தைகளை பெத்துக்கணும்... சந்திரபாபு நாயுடு 'ஜோக்'கால் சட்டசபையில் சிரிப்பலை..!

அதில் வேறு யாரும் பங்களிப்பு செய்ய முடியாது. எனவே மலை அடிவாரத்தில் மலையை ஒட்டி வழங்கப்பட்ட மூன்று நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட 35.27 ஏக்கர் நிலத்தை ரத்து செய்து அவை அனைத்தும் தேவஸ்தானத்திற்கு ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏழுமலையைிலும் வணிக ரீதியான செயல்பாடுகளை எக்காரணத்திற்கு கொண்டும் செய்ய அனுமதிக்க முடியாது. செய்யவும் கூடாது. ஓட்டல் நிர்வாகத்தினர் முற்றிலும் சைவ உணவு கடைபிடிப்பதாக தெரிவித்தனர்.

ஆனால் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களுக்கு வேண்டுமென்றால் மாற்று இடமாக மலைக்கு எதிர் திசையில் உள்ள சாலையில் இடம் ஒதுக்குவதாக கூறியுள்ளேன். தேவஸ்தானத்தில் பணிபுரியும் ஊழியர்கள், அதிகாரிகள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அனைவரும் உங்களால் முடிந்தால் நல்லது செய்யுங்கள். தவறு மட்டும் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். 

நாட்டில் எங்கிருந்தாலும் அல்லது உலகில் எந்த இடத்தில் இருந்தாலும் தேவஸ்தானத்தின் சொத்துக்களை காப்பாற்ற வேண்டிய கடமை உள்ளது. எனவே எந்த இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தாலும் அதனை சட்டரீதியாக எதிர்கொண்டு அனைத்து சொத்துக்களையும் மீட்கப்படும். திருப்பதி தேவஸ்தானத்தில் இந்துக்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும் எனவே அதற்கு ஏற்றார் போல் யாருடைய மனதும் புண்படாத வகையில் அவர்களை மாற்று இடத்தில் பணியமர்த்தப்படும். இதே போன்று கிறிஸ்டியன் மற்றும் முஸ்லிம் மதத்தினரும் அவரவர்கள் நிர்வாகத்தில் இந்துக்கள் பணிபுரிவதற்கான வாய்ப்பு இல்லை.

அவர்களையும் மாற்றி பணி அமர்த்தப்படும்.  நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தலைநகரில் வெங்கடேஸ்வர சாமியின் கோயில் கட்டப்பட வேண்டும். அதற்காக அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதப்படும் அவர்கள் இடம் வழங்க முன் வந்தால் அங்கு வெங்கடேஸ்வர சுவாமி கோவில் கட்டப்படும். 


இதேபோன்று உலகில்  இந்து மக்கள் அதிகமாக உள்ள பகுதிகளிலும் வெங்கடேஸ்வர சுவாமி கோயில் கட்டப்படும். இதற்கு  அந்த பகுதியில் உள்ளவர்கள் முன் வந்தால் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாநில அரசும் தேவஸ்தானமும் வழங்கும். ஆந்திராவின் பிரண்டாக கருதப்படுவது திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமி,  குச்சிப்புடி நடனம், அரக்கு காபி ஆகிய மூன்றையும் உலக அளவில் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு என்னிடம் உள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள கோயில்களை இந்துக்களின் புனித நகராக மாற்றி அதன் வளர்ச்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.

ஒரு காலத்தில் கற்களும் மண் பாறைகளாக காணப்பட்ட இந்த ஏழு மலைகளை கடும் சிரமத்திற்கு மத்தியில் மரக்கன்று நடப்பட்டதால் தற்போது 68.3 வனப்பகுதியாக மாறி உள்ளது. இதனை 80 முதல் 90 சதவீதமாக உயர்த்துவதற்கு செடிகள் வளர்க்கப்பட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன் என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஒவ்வொரு தொகுதியிலும் 10 ஆயிரம் வீடுகளுக்கு சோலார் பேனல்.. சந்திரபாபு அதிரடி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share