×
 

அண்ணா பல்கலைக்கழக போராட்டம்...பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்தாமல் அரசியலாக்குவது ஏன்?...உயர் நீதிமன்றம் கேள்வி

பெண்கள் பாதுகாப்பில் உண்மையான கவனம் செலுத்தாமல் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை விவகாரத்தை அரசியலாக்குவது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் கடந்த வாரம் உயர் நீதிமன்றம் கடுமையான கண்டனங்களை தெரிவித்து 3 ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது. மாணவியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவும், இலவச கல்வி வழங்கவும், தானாக பேட்டி அளித்த காவல் ஆணையர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டிருந்தது. 

பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் பாமக மகளிர் சங்கம் சார்பில் சௌமியா அன்புமணி தலைமையில் வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த அனுமதி கேட்ட நிலையில் அதை கடைசி நேரத்தில் போலீஸார் மறுத்ததாக கூறி பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டனர்.  
இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடைபெற உள்ள போராட்டத்திற்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட கோரி பாமக சார்பில் இன்று காலை சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

ஏற்கனவே அதிமுக,, நாம் தமிழர் கட்சி,, பாஜக, மாணவர் இயக்கங்கள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டங்கள் அனைத்திற்கும் சென்னை காவல்துறையிலிருந்து அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்யும் நபர்களை கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து மாலையில் போலீசார் விடுவித்தனர்.

இதையும் படிங்க: இந்த பக்கம் இவங்க, அந்த பக்கம் அவங்க... நடைபேரணி போராட்டத்தை கையில் எடுக்கும் காங்கிரஸ், பாஜக...

இந்தநிலையில் பாமக போராட்டத்திற்கு அனுமதி வழங்க கோரி பாமக கட்சி சார்பில் வழக்கறிஞர் பாலு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு முறையீடு செய்தார். போராட்டத்திற்கு அனுமதி வழங்க மறுத்த நீதிபதி, ”போராட்டம் நடத்தும் ஒவவொருவரும் முதலில் தங்கள் மனதில் கை வைத்து கூறுங்கள் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்படும்.

மேலும், இப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கு அனைவரும் வெட்க பட வேண்டும் என்று நீதிபதி வேதனை தெரிவித்தார். இந்த விவகாரத்தை அனைவரும் அரிசியலாக்கி வருகிறார்கள்.இந்த விவகாரத்தை நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.காவல்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது நீதிமன்றம் இந்த விவகாரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறது” என  தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்துவது ஏற்புடையது அல்ல என்று தெரிவித்த நீதிபதி, பெண்கள் பாதுகாப்பில் உண்மையான கவனம் செலுத்தாமல் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை விவகாரத்தை அரசியலாக்குவது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும்,வெறும் விளம்பரத்திற்காக இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளீர்கள்.இந்த சமூகத்தில் ஆண், பெண் என்ற பாகுபாடு இருப்பது மிகவும் வெட்கப்பட வேண்டிய விஷயம் என்று வேதனை தெரிவித்த நீதிபதி போராட்டத்திற்கு அனுமதி வழங்க முடியாது என்று தெரிவித்து உத்தரவிட்டார்.


சௌமியா அன்புமணி போராட்டம் நடத்தும்போதே உத்தரவு வந்த நிலையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட சௌமியா அன்புமணியும் பாமக தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க: இன்னுமா ஓயவில்லை இரட்டை இலை பிரச்னை.. ஏங்கி நிற்கும் ஓபிஎஸ்..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share