மதுபோதையில் திமுகவினர் அராஜகம்..! எங்க இருந்து துணிச்சல் வருது..? அண்ணாமலை விளாசல்..!
காவல் துறையினரையே தாக்கும் அளவிற்கு திமுகவினருக்கு எங்கிருந்து துணிச்சல் வந்தது என அண்ணாமலை சரமாரியாக சாடியுள்ளார்.
சென்னை வேளச்சேரி காந்தி சாலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்ட அம்பேத்கர் பிறந்தநாள் விழாவிற்காக, போக்குவரத்து நெரிசலை சரி செய்து கொண்டிருந்த காவலரை திமுகவினர் தாக்கிய சம்பவத்திற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ ஒன்றை பகிர்ந்து தனது கண்டனத்தை பதிவு செய்த அண்ணாமலை, காவல்துறையினரையே தாக்கும் அளவிற்கு திமுகவினருக்கு எங்கிருந்து துணிச்சல் வந்தது என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: பொன்முடியின் தூக்கத்தைக் கெடுத்த வானதி சீனிவாசன்... இன்று மாலை அதிரடி அறிவிப்பு!
ஏற்கனவே பெண் காவலர்கள் மீது பாலியல் சீண்டல்கள், தாக்குதல்கள் என தமிழகம் முழுவதும் பார்த்து வருகிறோம்., அந்த குற்றங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாமல், காவல்துறையினரின் கண்ணியம் காற்றில் பறக்கவிடப்பட்டதால், காவல்துறையினர் மீது திமுகவின் தாக்குதல் தொடர்கதை ஆகியிருக்கிறது., தற்போதும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் அனுப்பி வைத்திருக்கிறார்கள் என தெரிவித்தார்.
சட்டம், ஒழுங்கு சீர்குலைவுக்கு முக்கியக் காரணம், காவல்துறையின் கைகளைக் கட்டிப் போட்டிருப்பதே என தெரிவித்த அண்ணாமலை, தற்போது, காவல்துறை மீதும் தொடரும் திமுகவினர் தாக்குதலுக்கு காவல்துறைக்கு பொறுப்பான முதலமைச்சர் ஸ்டாலின் என்ன சொல்லப் போகிறார் என் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: களேபரமான அம்பேத்கர் பிறந்தநாள்.. திமுக - பாஜகவினர் இடையே மோதல்..!