நாளை வரை டைம் கேட்ட அண்ணாமலை... அதிமுக, பாஜக கூட்டணிக்கு விஜய் எதிர்ப்பா?
அதிமுகவுடன் கூட்டணி இருக்குமா என்பது குறித்து நாளை அறிவிப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
அதிமுகவுடன் கூட்டணி இருக்குமா என்பது குறித்து நாளை அறிவிப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலையிடம் அதிமுக உடனான கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், 2026ம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் முக்கியமானது. அதற்கு அவசர கதியில் கூட்டணி குறித்து பேச முடியாது.
இன்னும் இரண்டு நாட்களில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் தமிழகம் வர உள்ளார். அவர் தமிழகம் வரும்போது பல மாற்றங்கள் ஏற்படலாம். அதிமுகவுடனான கூட்டணி குறித்து நாளை மாலை நானே கூறுவேன் என்றார். கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக, பாஜக உடனான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. பாஜகவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி திட்டவட்டமாக கூறி வந்தார்.
இதற்கிடையே கோவையில் எஸ்பி வேலுமணியின் இல்ல திருமண விழாவில் அதிமுக, பாஜக தலைவர்கள் பங்கேற்றனர். பாஜகவில் எல்.முருகன், தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனால், மீண்டும் அதிமுக பாஜக இணைய வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியானது. இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்திந்த எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடன் கூட்டணி இருக்கும் என்றும் சொல்லவில்லை, இல்லை என்றும் சொல்லவில்லை.
இதையும் படிங்க: 38 வருட காத்திருப்பு... அண்ணாமலையால் செய்ய முடியுமா?
திமுக தான் தங்களின் எதிரி என்றும், திமுகவை வீழ்த்த எந்த முடிவும் எடுப்போம் என்றார். மேலும் அதற்கான நேரம் வரும்போது அதிமுக கூட்டணி பற்றி சொல்வதாக கூறினார். இதையடுத்து தான் அதிமுகவுடன் கூட்டணி குறித்து அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பபப்ட்டது. அதற்கு நாளை பதில் சொல்வதாக அண்ணாமலை கூறி இருக்கிறார்.
இரு தலைவர்களும் உறுதியாக சொல்லாமல் சமாளிப்பதால் அதிமுக, பாஜக கூட்டணி இணைய வாய்ப்புள்ளதாக அரசியல் விமசர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதேநேரம் விஜய்யின் தவெக உடன் கூட்டணி அமைக்க எடப்பாடி விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அனைத்துக் கட்சிக் கூட்டம்... பாஜக ஏன் வரணும்.? விரிவாக விளக்கிய கனிமொழி.!