'திஸ் இஸ் ராங் ஸ்பீச் ப்ரோ...' விஜய் பாணியிலேயே பதிலடி கொடுத்த அண்ணாமலை..!
இவ்வளவு பேச்சு பேசிறீர்களே நானும் தோனியை போல் புகழ் பெற வேண்டும். நானும் பீகார், ஜார்கண்டிலிருந்து வந்திருக்கிறேன் என்று சொல்லக்கூடிய பிரசாந்த் கிஷோர், எதற்காக திமுகவை ஆட்சியில் கொண்டு வந்து அமர்த்தினீர்கள்?
மும்மொழி கொள்கையில் மாநில அரசும், மத்திய அரசும் நாடகமாடுவதாக விமர்சித்த தவெக தலைவர் விஜய், 'வாட் ப்ரோ… திஸ் இஸ் ராங் ப்ரோ' எனத் தெரிவித்து இருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ''தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது ஆண்டு தொடக்கத்தில் விழா நடந்திருக்கிறது. சகோதரர் விஜய் அவர்கள் பேசும்போது மத்திய அரசு- மாநில அரசு இரண்டையும் குறை சொல்லி இருக்கிறார். வாட் ப்ரோ..? ஒய் ப்ரோ..? உங்களுக்குள் எல்கேஜி பசங்க மாதிரி சண்டை போட்டுக் கொள்கிறீர்கள்? எனக் கேட்டு இருக்கிறார்.
நான் விஜய் அவர்களை கேட்கிறேன். 'திஸ் இஸ் ராங் பீச் ப்ரோ... ஒய் ப்ரோ..? நான் விஜய் அவர்கள் என்ன கேட்கிறேன், உங்கள் குழந்தைகளுக்கு மூன்று மொழி பயிற்றுவிக்கிறீர்கள். நீங்கள் நடத்துகிற விஜய் வித்தியாஷ்ரம் பள்ளியில் மூன்று மொழி. ஆனால் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்களுக்கு இரண்டு மொழி. வாட் ப்ரோ? நீங்கள் வாழ்க்கையில் எப்படி நடந்து கொள்கிறீர்களோ அதை மற்றவர்களுக்கும் செய்யுங்கள் ப்ரோ என்று விஜய் அவர்களுக்கு தமிழக பாரதிய ஜனதாவின் கட்சியின் சார்பாக இந்த இடத்தில் நான் வலியுறுத்துகிறேன்.
இதையும் படிங்க: தாடி பாலாஜிக்கு அனுமதி மறுப்பு..! நெஞ்சில் பச்சை குத்தியதற்கு இதுதானா பரிசு..!
அதே நேரத்தில் தவெக கெட் அவுட் கையெழுத்து இயக்கம். கெட் அவுட் என்று ஆரம்பிக்கிறார் பிரசாந்த் கிஷோர். விஜய் அவர்களை பார்த்து கெட் அவுட் என்று பிரசாந்த் கிஷோர் சொல்கிறார். கெட் அவுட் ஆரம்பித்து ஒரு நிமிடத்தில் பிரசாந்த் கிஷோரிடம் கையெழுத்து போடச் சொல்கிறார்கள். அவர் கையெழுத்து போடாம் கெட் அவுட் செனச் சொல்லி விட்டுச் செல்கிறார். உடனே ஆதவ் அர்ஜூனாவும் கையெழுத்துப்போடச் சொல்கிறார். உடனே நான் கெட் அவுட் என்று பிரசாந்த் கிஷோரும் கையெழுத்துப் போடாமல் செல்கிறார்.
30 செகண்டிலேயே இந்த கெட் அவுட்டுக்கு என்ன மரியாதை என்பது விஜய் அவர்களுக்கு ஆலோசனை சொல்லக்கூடிய சகோதரர் பிரசாத் கிஷோர் அவர்கள் நடவடிக்கை நமக்கு காண்பிக்கிறது. ஆகையால், கெட் அவுட் என்பெதல்லாம் ஒரு காரணத்திற்காக செய்கிறார்கள். எங்கேயும், யாரும் எந்த மொழியையும் திணிக்கவில்லை. நீங்களே பொய் சொல்லலாமா ப்ரோ? அருமை சகோதரர் விஜய் அவர்கள் இதை செய்ய வேண்டாம் என்று வலியுறுத்தி சொல்லிக் கொள்கிறேன் .
யாரையும் நிராகரிக்க கூடியவர்கள் தமிழர்கள் இல்லை. தமிழ்நாட்டிற்கு யார் நல்லது செய்தாலும் ஏற்றுக்கொள்கிறோம். பிரசாந்த் கிஷோர் அவர்களுக்கு ஒரே ஒரு கேள்வி. திமுகவை கொண்டு வந்து உட்கார வைத்தீர்கள். இவ்வளவு பேச்சு பேசிறீர்களே நானும் தோனியை போல் புகழ் பெற வேண்டும். நானும் பீகார், ஜார்கண்டிலிருந்து வந்திருக்கிறேன் என்று சொல்லக்கூடிய பிரசாந்த் கிஷோர், எதற்காக திமுகவை ஆட்சியில் கொண்டு வந்து அமர்த்தினீர்கள்?
அதற்காக மக்கள் எப்போதும் உங்களை மன்னிக்க மாட்டார்கள். அது உண்மை. தனிப்பட்ட முறையில் உங்களுக்கும், எங்களுக்கும் என்ன பிரச்சனை? இன்னொரு மாநிலத்தில் இருந்து வருகிறீர்கள். தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று எந்த வழியில் நீங்கள் செய்தாலும் இந்தியாவில் யாராக இருந்தாலும் தமிழர்கள் திரும்ப அந்த மரியாதை கொடுக்கத்தான் போகிறார்கள்'' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: எங்க இருந்து ப்ரோ ஊழலை ஒழிக்க போறீங்க?... தவெக நிர்வாகிகளால் அசிங்கப்பட்ட விஜய்... பொளந்தெடுக்கும் நெட்டிசன்கள்..!