காமராஜரையே களங்கப்படுத்துகிறார் அண்ணாமலை..! அமைச்சர் சேகர்பாபு காட்டம்..!
படிக்காதவர் எப்படி பள்ளி பற்றி பேச முடியும் என்பது காமராஜரை களங்கப் படுத்துவதாக உள்ளது என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
திமுக மேடைகளில் ஆபாச பேச்சு தான் இருக்கும் என்றும் அதற்கு கைதட்ட 100 பேர் இருக்கிறார்கள், இதை வைத்துக்கொண்டு 2026 ஆம் ஆண்டு 200 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்ற மாய உலகத்தின் திமுகவினர் இருப்பதாக அண்ணாமலை பேசினார். வட இந்தியர்கள் யாரும் தமிழர்களைப் பற்றி தெளிவாக பேசியதில்லை, ஆனால் திமுகவினர் வட மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு முதலமைச்சர்களையும் இழிவாக பேசுகிறார்கள்... இதற்கு காரணம் பயம் தான் என்று கூறியிருந்தார்.
சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவில் இரண்டு கல்விக் கொள்கைகள் தான் கொண்டு வரப்பட்டதாகவும் அதில் கட்டாயம் இந்தி படிக்க வேண்டும் என்று இருந்தது., அதனை மோடி மாற்றி ஏதாவது ஒரு மொழி படிக்க வேண்டும் என்று கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுகவுக்கு 200 தொகுதியில் வெற்றியா.? அடுத்து பாஜக ஆட்சியில்... முக்கியமான அறிவிப்பை வெளியிட்ட அண்ணாமலை.!
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ரசிகர் மன்ற தலைவராக இருப்பதாகவும் இந்த பணியைத் தாண்டி நேரமிருந்தால் கல்வியை பற்றி பேசுவார் என்றும் விமர்சித்தார்.
மேலும் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி சேகர் பாபு ரகுபதி, காந்தி ஆகியோர் மீது வழக்குகள் உள்ளதாகவும், சிறைக்குச் சென்றவர்கள், மக்கள் பணத்தை கொள்ளை அடித்தவர்கள் கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் எல்லாம் சேர்ந்து கொண்டு தமிழ்நாட்டின் கல்விக் கொள்கையை பற்றி பேசுவதாகவும் விமர்சித்து இருந்தார். சென்னையில் ரவுடி சரித்திர பதிவேட்டில் இருந்தவர் அமைச்சர் சேகர்பாபு., இப்படிப்பட்டவர்கள் அமைச்சர்களாக இருந்தால் தமிழ்நாடு விளங்குமா என்று பேசு இருந்தார்.
இந்த நிலையில், படிக்காதோர் எப்படி பள்ளி பற்றி பேச முடியும் என்ற அண்ணாமலையின் கூற்று காமராஜரை கலங்கப்படுத்தும் விதமாக உள்ளது என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். படிக்காதவர்களும் சேவை செய்வார்கள் என்பது அண்ணாமலை போன்ற தற்குறிகளுக்கு தெரியாது என்றும் கூட்டுக் குழு கூட்டத்தை உப்பு சப்பில்லாத கூட்டம் என்கிறீர்கள்...பின்னர் அதை பற்றி நீங்கள் ஏன் பேசுகிறீர்கள்? என்றார்.
இதையும் படிங்க: அரசியலில் அண்ணாமலையின் எதிர்காலம் என்ன?- கணித்துச் சொன்ன பவன் கல்யாண்