டெல்லியே திரும்பிப் பார்க்கணும்... பதவியை தக்க வைக்க எடுத்த அஸ்திரம்... சேலம்காரரை காப்பி அடித்த அண்ணாமலை..?
28 ஆண்டுகளாக செருப்பு அணிய முடியாமல் தவிக்கும் அவரது நிலைமை உணர்ந்தாவது இந்த போராட்ட அறிவிப்பை வெளியிடாமல் தவிர்த்து இருக்கலாமே அண்ணாமலை..!
பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தியது தான் தமிழகம் தாண்டியும் ஹாட் டாபிக். இதனை பாஜக நிர்வாகிகள் சிலரே விமர்சித்தும், கிண்டலடித்தும் வருகிறார்கள். அண்ணாமலை வானத்தையே வில்லாக வளைப்பேன் எனச் சொன்னதை நம்பி ஏமாந்துபோன பாஜக டெல்லி மேலிடம் அவரை மாநிலத் தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்கிற முடிவில் இருந்ததாக கூறப்படுகிறது.
அந்நேரத்தில் லண்டனுக்கு அரசியல் படிக்கப் போவதாகச் சொல்லி தப்பி இருக்கிறார். திரும்பி வந்தாலும் மேலிடம் அவரை கண்டு கொள்ளவில்லை என்கிறார்கள். அதே நேரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தினமும் ஒரு அறிக்கை கொடுத்துக் கொண்டே இருந்தார். அவரை பின்னுக்கு தள்ளி, எப்படியாவது ஏதோ ஒன்றைச்சொல்லி பரபரப்பாவதோடு டெல்லி மேலிடத்தின் கவனத்தை தன்பக்கம் திருப்ப வேண்டும் என பலத்த யோசனையில் இருந்துள்ளார் அண்ணாமலை.
இதற்காக போட்ட திட்டம்தான் காலில் செருப்பு போடமாட்டேன், 48 நாள் நோன்பு இருப்பேன், சாட்டையால் தனக்குத்தானே அடிப்பேன் என்கிற அடுக்கடுக்கான அறிவிப்புகள். அவரது கட்சிக்காரர்கள் தேங்காய் நாரால் உற்பத்தி செய்யப்பட்ட சாட்டையைத் தான் தயார் செய்து எடுத்து வந்துள்ளனர். அதை வாங்கிப்பார்த்து அதிர்ச்சியான அண்ணாமலை தூரப்போட்டுவிட்டு நூலால் தயாரிக்கப்பட்ட சாட்டையை வாங்கி தன்னை அடித்துக் கொண்டார்.
இதையும் படிங்க: ‘‘அன்பின் ஆடே..!‘ சாட்டையால் அடித்துக் கொண்ட அண்ணாமலையை ‘பிரியாணி’ஆக்கிய திமுக ஐடிவிங்..!
அப்போது அங்கிருந்த பாஜகவினர் சிலர் நமட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டே வேடிக்கை பார்த்துள்ளனர். இதனால் எல்லாம் டெல்லி மேலிடத்தின் கருணை பார்வை விழுந்து விடாது. பாஜக தலைமைக்கு தேவை தேர்தல் ரிசல்ட் மட்டும் தான். டெபாசிட் காலியாகிற நிலையில் கட்சியை வைத்துக்கொண்டு இப்படியா செய்வது? என பாஜக நிர்வாகிகள் அலுத்துக்கொள்கிறார்கள்.
இதில் இன்னொரு விஷயமும் கூறப்படுகிறது. சேலத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் 28 ஆண்டுகளுக்கு முன் ஒரு சபதம் எடுத்துள்ளார். மூப்பனார் ஆட்சிக்கு வரும்வரை செருப்பை அணியமாட்டேன் எனச் சொல்லி சபதம் போட்டிருந்தார். செல்வச் செழிப்போடு இருக்கும் அந்த தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகி இன்னும் செருப்பு அணியாமல்தான் இருக்கிறார்.
இதனைக் கேள்விப்பட்டே கூடுதலாக செருப்பு அணியாத போராட்டத்தையும் சேர்த்துள்ளார் அண்ணாமலை என்கிறார்கள். 28 ஆண்டுகளாக செருப்பு அணிய முடியாமல் தவிக்கும் அவரது நிலைமை உணர்ந்தாவது இந்த போராட்ட அறிவிப்பை வெளியிடாமல் தவிர்த்து இருக்கலாமே அண்ணாமலை..!
‘‘அண்ணாமலைக்கு சொன்ன சொல்லைக் காப்பாற்றும் வைராக்கியம் இருக்குமென நம்புகிறோம். இதில் வருந்தத் தக்க செய்தி என்னவென்றால், இனி நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதும் காலனி அணிய முடியாமல் போய்விட்டதே என்பதுதான் வருத்தம்’’எனக் கிண்டலடிக்கிறார்கள் எதிர்கட்சியினர்.
இதையும் படிங்க: மன்மோகன் சிங்கை பிரதமராக்கியது ஏன்..? 14 ஆண்டு கால மவுனம் உடைத்த சோனியா காந்தி..!