துர்கா ஸ்டாலினிடம் பொட்டு வைக்காதீங்கன்னு சொல்ல தைரியமிருக்கா..? ஆ.ராசாவின் இந்து வெறுப்பு..!
'திமுகவில் இருக்கும் முஸ்லிம் கைலி கட்டக் கூடாது. தலையில் தொப்பி வைத்துக் கொள்ளக் கூடாது. அதே போன்று திமுகவில் இருக்கும் கிறித்துவர்கள் ஞான ஸ்நானம், பாவமன்னிப்பு போன்ற சடங்குகள் ஏற்கக் கூடாது. சிலுவை அணிவது தவறு என்று உரக்க கூவுவாரா ?
திமுக எம்.பி.,யான ஆ.ராசா, இந்துக்களுக்கு எதிராகவும், இந்து மத நம்பிக்கைகளை புண்படுத்தும் விதமாகவும் அவ்வப்போது பேசி சர்ச்சையை ஏற்படுத்துவதை வழக்கமாக கொண்டவர்.
'நாங்கள் ராமருக்கு எதிரிகள். சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சமன். இந்துவாக, இருக்கும் வரை நீ தீண்ட தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்?' போன்ற பல துவேஷங்களை இந்து மதத்திற்கு எதிராக அள்ளி வீசியவர். அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சை கருத்தை பேசி ஹிந்துக்களின் கோபத்திற்கு ஆளாகி இருக்கிறார் இந்த ஆ.ராசா.
இதையும் படிங்க: ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சு..! எங்க தலைவர் அத சொல்லல.. மறுக்கும் சேகர்பாபு..!
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணை செயலாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற ஆ.ராசா பேசியபோது, ''கடவுள் தேவைப்படுவோர் வைத்து கொள்ளலாம். சாமி கும்பிட வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் நீங்களும் பொட்டு வைத்து, சங்கியும் பொட்டு வைக்கும்போது, நீங்களும் கையில் கயிறு கட்டி, சங்கியும் கையில் கயிறு கட்டும்போது எவன் சங்கி, எவன் திமுககாரன் என்ற வித்தியாசம் தெரியாது. இதனால் தான் சொல்கிறேன் திமுக கரை வேட்டி கட்டும்போது பொட்டு வைக்காதீங்க'' என்று பேசினார்.
கட்சி வேறுபாடின்றி நெற்றியில் விபூதி, குங்குமம் இட்டுக்கொள்வது அனைத்து இந்துக்களின் பழக்கம். தான் ஒரு உண்மையான இந்து என்று அவர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள். தெய்வ நம்பிக்கையையும் பறைசாற்றுகிறார்கள். இவர்கள் எல்லோரும் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள்.
பழநி, திருப்பதி கோயில்களுக்கு சென்று வரும் பக்தர்கள் கடவுளை நினைத்து கைகளில் கயிறு கட்டிக்கொள்வது திமுக என்ற கட்சி தோன்றுவதற்கு முன்பு இருந்தே உள்ள வழக்கம். இதற்கும் அரசியலுக்கும் என்ன சம்மந்தம்?. பா.ஜ., கட்சியினர் கைகளில் கயிறு கட்டுவது, அரசியல் அடையாளத்திற்காக அல்ல. தான் ஒரு தெய்வ நம்பிக்கை உள்ளவன் என்று காட்டிக்கொள்வதற்காக.
இதை புரிந்து கொள்ளாத ராசா, தமிழகத்தில் உள்ள ஹிந்துக்கள் நேற்று கயிறு வாங்கி, இன்று கையில் கட்டிக்கொள்வதாக நினைத்துக்கொண்டு பினாத்திக்கொண்டு இருக்கிறார்.
இத்குறித்து கருத்து தெரிவித்துள்ள அரசியல் விமர்சகர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ''துர்கா ஸ்டாலின் திமுக அனுதாபி இல்லையா? இந்நிலையில், திமுக கரை வேட்டி கட்டினால், ஹிந்து என்ற அடையாளத்தை தூக்கி எறிய வேண்டும் என்பது போல ஆ.ராசா பேசியது திமுகவினருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினின் மனைவி துர்கா, கோயில் கோயிலாக சென்று வருகிறாரே, அவர் திமுக அனுதாபி இல்லையா?
மிஸ்டர் ராஜா உங்களுக்கு தைரியம் இருந்தால் இந்த போட்டோவில் உள்ள ஏதாவது ஒரு நபரை பார்த்து இந்த கேள்வியை கேட்டு விடுங்கள் பார்ப்போம். அப்படி என்றால் உங்களுடைய அறிவுரை எல்லாம் ஒரு கோட்டரை ஏற்றிக்கொண்டு தரையில் அமர்ந்து கொண்டு உங்களுடைய பேச்சைக் கேட்கும் அடிமட்ட தொண்டர்களுக்கு மட்டும் தானா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
''திமுகவில் இருக்கும் முஸ்லிம் கைலி கட்டக் கூடாது. தலையில் தொப்பி வைத்துக் கொள்ளக் கூடாது. அதே போன்று திமுகவில் இருக்கும் கிறித்துவர்கள் ஞான ஸ்நானம், பாவமன்னிப்பு போன்ற சடங்குகள் ஏற்கக் கூடாது. சிலுவை அணிவது தவறு என்று உரக்க கூவுவாரா ? முதலில் உங்களுக்கு பொது தொகுதியில் போட்டி இட உங்கள் கட்சியில் அனுமதிப்பார்களா?'' என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆ.ராசா மீதான வழக்கு ரத்து... சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!