×
 

தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமை அன்றாட நிகழ்வாகி விட்டது.. திமுக அரசு மீது பாயும் பாஜக தலைவர் அண்ணாமலை...

பாலியல் வன்கொடுமை அன்றாட நிகழ்வாகி விட்டது: அண்ணாமலை

செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்த 18 வயது இளம்பெண் ஆட்டோ ஒன்றில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையத்திற்கு வெளியே 18 வயது இளம்பெண் ஆட்டோவில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான நிகழ்வு வேதனை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு பொறுப்புள்ள குடிமகன் ஒருவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கவே அப்பெண் காப்பாற்றப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் பாலியல் வன்கொடுமை என்பது பயங்கரமான உண்மையாகி விட்டது என்றும் போதைப்பொருள் எளிதில் கிடைக்கக் கூடிய பொருளாக மாறிவிட்டது என்றும் அண்ணாமலை கவலை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு... எங்கள சீண்டாதீங்க... கொதித்தெழுந்த அண்ணாமலை! 

ஒருபுறம் போதைப்பொருள் அதிகமாகி உள்ளது ஆனால், அதில் தொடர்புடைய குற்றவாளிகள் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளில் அதாவது 2022 மற்றும் 2024 ஆண்டுகளுக்கு இடையில் தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் தடுப்புப் பிரிவில் வெறும் 1,122 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஆனால் 2021ல் இதே பிரிவின் கீழ் 9,632 பேர் கைது செய்யப்பட்டுள்ளதை அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

கஞ்சா, மெத்தாபெட்டமைன் போன்ற போதைப் பொருட்களின் விற்பனை அதிகரித்து வருவதாகவும், ஆனால் கைது செய்யப்படுவர்களின் எண்ணிக்கை மட்டும் குறைந்து வருவது ஏன் என்பதும் அவரது கேள்வி. 
போதைப்பொருள் வியாபாரிகளை சுதந்திரமாக நடத்துவதில் தமிழக அரசு வேண்டுமென்றே மெத்தனமாகிவிட்டதா?  போதைப்பொருள் கடத்தல்காரர்களை பாதுகாக்கிறதா தமிழக அரசு? என்றும் அண்ணாமலை வினவியுள்ளார்.

தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக நடப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு இன்னும் எத்தனை இளம்பெண்கள் பலியாக வேண்டும்? என தமிழக அரசை நோக்கி காட்டத்துடன் விமர்சித்துள்ளார் அண்ணாமலை.

இதையும் படிங்க: அண்ணாமலை தாண்டா இங்க கெத்து..! உள் கட்சி எதிரிகளின் வயிற்றில் புளியை கரைத்த அமித்ஷா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share