ஆட்டோவில் தவறிய I-Pad.. பத்திரமாக மீட்பு.. ஆட்டோ ஓட்டுநற்கு குவியும் பாராட்டுகள்..
சென்னையில் பயணி ஒருவர் அவர் தவறவிட்ட ipad மற்றும் சான்றிதழை உரியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
சென்னை மணலி புதுநகரை சேர்ந்தவர் தன்யா சந்தோஷி. இவர் பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மேல்படிப்புக்காக இவர் மெட்ராஸ் யூனிவர்சிட்டி சென்று விட்டு மீண்டும் அவரது வீட்டிற்கு ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது அவர் வைத்திருந்த ஆப்பிள் ஐபேட் மற்றும் சான்றிதழ்கள் அடங்கிய பையை ஆட்டோ விலையே தவற விட்டு இறங்கியுள்ளார். இலையில் இது குறித்து சந்தோஷை அவரது தந்தையுடன் மணலி புதுநகர் காவல் நிலைய சட்ட ஒழுங்கு ஆய்வாளர் பாஸ்கரிடம் புகார் அளித்திருந்துள்ளார். சந்தோஷி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் ஆட்டோவில் பேக் ஒன்று இறந்ததை கவனித்த ஆட்டோ ஓட்டுநர் அதனை அருகில் இருந்த காவல் நிலையத்தில் ஒப்படைக்க சென்றுள்ளார்.
அப்போது நல்வாய்ப்பாக சந்தோஷம் மற்றும் அவரது தந்தையும் அதே காவல் நிலையத்தில் இருந்தது தெரிய வந்தது. அப்போது ஆட்டோ ஓட்டுனரான சிவகுமார் ஒன்றரை லட்சம் மதிப்பிலான ஆப்பிள் ஐ-பேட் மற்றும் சான்றிதழ் அடங்கிய பையை போலீசாரிடம் ஒப்படைத்தார். அதனை பெற்றுக் கொண்ட போலீசார் பையை சோதனை செய்ததில் பையில் இருந்த ஐபேட் மற்றும் சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட சந்தோஷியிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து தான்யா சந்தோஷி பையைப் பெற்றுக் கொண்டு அனைத்து சான்றிதழ்களும் இருப்பதாக உறுதி அளித்தார். இதனை அடுத்து ஆட்டோ ஓட்டுனரின் நேர்மையான செயலை பாராட்டி அவருக்கு ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் ஐடி ஊழியர் ஆன சந்தோஷி மற்றும் அவரது தந்தையும் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அலெர்ட் ஆகிக்கோங்க மக்களே.. தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
இதையும் படிங்க: இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதி விபத்து.. கணவன் கண் முன்னே மனைவி மற்றும் மகன் பலி..