×
 

இனி பி.இ., பி.எட்., முடித்தாலே பட்டதாரி ஆசிரியர் ஆகலாம்! புதிய அரசாணை வெளியீடு...

பி.இ.,பி.எட்., முடித்தவர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்றலாம் என உயர் கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

பி.இ. பட்டத்துடன் பி.எட்., முடித்தவர்கள் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக பணிபுரிய தகுதி உள்ளவர்கள் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இது குறித்து உயர்கல்வித்துறை செயலர் கே.கோபால் அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கொல்கத்தாவில் உள்ள மேற்குவங்க தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி. டெக் எலக்ட்ரிக்கல் பொறியியல் படிப்பு வேலை வாய்ப்பு வகையில் மற்றும் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் படிப்புக்கு சமமானது என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சிவராத்திரி விழா ஏற்பாட்டில் கலவரம்! தீக்கிரையான கார், பைக்குகள்..!

இதேபோல், பி.இ., படிப்பில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றவர்கள் இயற்பியல் அறிவியலில் பி.எட்., முடித்திருந்தால் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரியலாம் என்றும் அந்த ஆசிரியர்கள் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்களை பயிற்றுவிக்க தகுதியானவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டிராபிக்கை குறைக்க இதுதான் வழி! அரசுக்கு காவல்துறை வழங்கிய முக்கிய பரிந்துரைகள்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share