×
 

வாருங்கள்..! கேள்வி கேளுங்கள்..! மாநாட்டில் கலந்துகொள்ள ராகுல்காந்தி அழைப்பு..!

பீகாரில் நடைபெறும் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டு உரிமைகளுக்காக குரல் எழுப்புங்கள் என்று ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

பீகாரில் தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. தற்போது என் டி ஏ கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதீஷ்குமார் தலைமையில் ஆட்சி நடைபெற்ற வருகிறது. பீகாரில் எதிர்க்கட்சியாக இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி உள்ளது.

பலமுறை கூட்டணி மாறினாலும் முதல்வர் நாற்காலியை இழக்காமல் ஐக்கிய ஜனதா தள கட்சியின் நிதிஷ்குமார் தற்போது பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியை நடத்தி வருகிறார்.243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநில சட்டப்பேரவைக்கு வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அதிக அளவு வாக்குகளை பெற்று பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்க வேண்டும் என்ற அமைப்பில் இந்தியா கூட்டணியும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதில் நிதிஷ்குமார் தலைமையிலான என் டி ஏ கூட்டணியும் முனைப்பு காட்டி வருகின்றனர். 

இதையும் படிங்க: கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு குறிவைத்த ஆர்எஸ்எஸ்..! ராகுல் காந்தி விமர்சனத்தால் பின்வாங்கியது..!

இந்நிலையில் இன்று பீகாரில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடத்தப்படும் பாதயாத்திரையில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொள்ள உள்ளார். பீகாரில் நிலவும் பிரச்சனைகளை சுட்டிக்காட்டி மாநில இளைஞர்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றிய வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, பிஹாரின் இளம் நண்பர்களே.. இன்று, தான் பெகுசராய்க்கு வருகை தர உள்ளதாகவும், ஓடுவதை நிறுத்துங்கள் தோளோடு தோள் சேர்ந்து நடந்து செல்லுங்கள் என கூறியுள்ளார்.

பீகார் இளைஞர்களின் உணர்வு, போராட்டம் மற்றும் அவர்களின் துன்பம் ஆகியவற்றை உலகம் முழுவதும் காண வேண்டும் என்பதே இதன் குறிக்கோள் என்றும் நீங்களும் வெள்ளை நிற டி-சர்ட் அணிந்து வாருங்கள்.,கேள்வி கேளுங்கள். உங்கள் உரிமைகளுக்காக பீகார் அரசிடம் குரல் எழுப்புங்கள் என்று கூறியுள்ளார். மேலும், சட்டமன்றத் தேர்தலில் அந்த அரசை பதவியில் இருந்து அகற்ற வேண்டும் என்றும் ராகுல்காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: கழுகாக நினைத்து காக்காவாகும் காங்கிரஸ்... பாஜக-வை வீழ்த்த மோடியின் பாதை... ராகுலின் புது ரூட்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share