சின்னம்மா இல்ல பெரியம்மா இல்லனு பேசுறது தான் உங்க கொள்கையா? அதிமுக மாஜி MLA-வை கிழித்த பாஜக நிர்வாகி..!
கூட்டணி குறித்து பேசிய அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ குணசேகரனுக்கு பாஜக நிர்வாகி எச்சரிக்கை விடுத்துள்ளார்
திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், பாஜகவுடன் கூட்டணி வைத்தது வருத்தமாக உள்ளது என அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ குணசேகரன் தெரிவித்தார். யாரும் இஸ்லாமியர்கள் யாரும் வருத்தம் கொள்ள வேண்டாம் என குணசேகரன் பேசி இருந்தார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் குணசேகரனை எதிர்த்து திமுகவை சேர்ந்த செல்வராஜ் போட்டியிட்டார். இஸ்லாமிய மக்கள் அதிகளவில் வசிக்கும் திருப்பூர் தெற்கு பகுதியில் தோல்வி அடைந்த நிலையில், அதனை குறிப்பிட்டு பேசி இருந்தார்.
இதையும் படிங்க: Ex. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி!
கூட்டணி குறித்து பேசிய அவரது பேச்சுக்கு திருப்பூர் பாஜக வடக்கு மாவட்ட செயலாளர் கார்த்திக் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், நீங்கள் தோற்றதற்கும், கூட்டணி குறித்து பேசுவதற்கும் எந்த தார்மீக உரிமையும் கிடையாது என கூறியுள்ளார். தொடந்து பாஜக குறித்து சமூக வலைத்தளங்களில் குணசேகரன் வஞ்சித்து வருவதாகவும் இது நல்லதுக்கு அல்ல என்றும் எச்சரித்தார். மேலும், சின்னம்மா என்று சொல்கிறீர்கள், பிறகு எடப்பாடி என கூறுகிறீர்கள்...இது தான் உங்க கொள்கையா என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: பாஜகவுடன் கூட்டணி.. அதிருப்தியில் விலகிய அதிமுக நிர்வாகி..!