×
 

ED, income tax, போர்டுல கருப்பு பெயிண்ட் அடிக்க சொல்லுங்க பார்க்கலாம்..! திமுக மீது அண்ணாமலை அட்டாக்..!

கருப்பு பெயிண்ட் டப்பாவுடன் திரியும் திமுகவினர் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

கருப்பு பெயிண்ட் டப்பாவுடன் திரியும் திமுகவினர், அமலாக்கத்துறை இயக்குனரகம் மற்றும் வருமான வரி அலுவலகத்திற்கும் செல்லுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். அலுவலகங்களின் முகவரிகளை அடிக்கடி அங்கு செல்லும் திமுக அமைச்சர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் 

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தமிழக வருகைக்கு பின் அரசியல் களம் சூடு பிடித்து விட்டது. மும்மொழி பாட திட்டத்தை அமல்படுத்தாவிட்டால் அதற்கான நிதியை கொடுக்க முடியாது என சொல்லி சென்றதிலிருந்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கையில் எடுத்துள்ளன.

இதையும் படிங்க: மலைப்பாதையில் சடலத்தை டோலி கட்டி தூக்கிச் சென்ற அவலம்.. கொடுத்த நிதி என்னாச்சு? ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி..!

திமுகவின் இந்தப் போராட்டத்தை வெறும் அரசியல் ஸ்டன்ட் என பிஜேபி விமர்சித்து வரும் வேளையில் திமுகவினரோ ஒரு படி மேலே சென்று ரயில் நிலையங்களில் உள்ள இந்தி எழுத்துக்களை அழிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் மத்திய அரசு அலுவலகங்களான தபால் அலுவலகம், பொதுவுடமை வங்கிகள் என ஹிந்தி எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் தார் பூசி அழிக்கும் வேளையில் திமுகவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இரு தினங்களுக்கு முன்பு பொள்ளாச்சி ரயில் சந்திப்பில் திமுகவின் இலக்கியப் பிரிவு மாவட்ட செயலாளர் தென்றல் மற்றும் சிலர் கையில் கருப்பு தார் கொண்டு பொள்ளாச்சி ஜங்ஷன் என்கிற ஹிந்தி எழுத்தை அடித்தனர். இதை பார்த்த பாலக்காடு ரயில்வே போலீசார் உடனடியாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அழிக்கப்பட்ட ஹிந்தி எழுத்துக்களை மீண்டும் சரி செய்து விளம்பரமாகவும் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

ரயில்வே போலீசாரின் இந்த நடவடிக்கை அடுத்து தமிழகம் முழுவதும் திமுகவினர் இந்தி அழைப்பு போராட்டத்தை தீவிரப் படுத்தி உள்ளனர். இந்த நிலையில் தான் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் நகரத்தில் உள்ள ரயில்வே நிலையத்தில் உள்ள பெயர் பலகையில் ஹிந்தி எழுத்துக்களை அழிக்கும் பணியில் அத்தொகுதியின் சட்டமன்ற திமுக உறுப்பினர் இ.ராஜா ஈடுபட்டார்,அது சமூக வலைதளங்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளியானது. சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் இ.ராஜாவின் இந்த செயலை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை திமுகவினரை கடுமையாக தாக்கி பேசியுள்ளது பரபப்பை கிளப்பியுள்ளது. கருப்பு பெயிண்ட் டப்பாவுடன் திரியும் திமுகவினர், அமலாக்கத்துறை இயக்குனரகம் மற்றும் வருமான வரி அலுவலகத்திற்கும் செல்லுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். அலுவலகங்களின் முகவரிகளை அடிக்கடி அங்கு செல்லும் திமுக அமைச்சர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

இதையும் படிங்க: அதிமுக ஆட்சி வேணும்னா அணிகள் இணையணும்... ஓயாமல் வலியுறுத்தும் ஓ.பன்னீர்செல்வம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share