“பார்த்துப் பேசுங்க ஸ்டாலின்”... டென்ஷனான தமிழிசை...! - தமிழக அரசுக்கு சரமாரி கேள்விகள்!
இந்தியாவிலேயே பெண்களுக்கு தமிழ்நாடு தான் பாதுகாப்பான மாநிலம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருப்பதை, பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கடுமையாக கண்டித்துள்ளார்.
இந்தியாவிலேயே பெண்களுக்கு தமிழ்நாடு தான் பாதுகாப்பான மாநிலம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருப்பதை, பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கடுமையாக கண்டித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக மையக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க பின் செய்தியாளர்களைச் சந்தித்த மூத்த தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன், அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் திமுக அரசின் நடவடிக்கைகளைக் கடுமையாக கண்டித்தார்.
பெண்களின் பாதுகாப்பிற்கு திமுக அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காது என்பதால் தான், அண்ணா பல்கலைக்கழக வழக்கை சிபிஐ விசாரிக்க கோருகிறோம். இந்த விவகாரத்திற்கு எதிராக கண்டிக்கும் அனைவரது குரலும் நசுக்கப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தமிழ்நாடு அரசு அடக்குமுறையைக் கையாள்வது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: காங்கிரசுக்கு 'அடுத்த அடி' : டெல்லி தேர்தலில் கெஜ்ரிவாலுக்கு சமாஜ்வாதி ஆதரவு; தனித்து களம் காண்கிறார், மாயாவதி
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியாவிலேயே சென்னையும், கோவையும் தான் பாதுகாப்பாக இருக்கிறது எனக்கூறியதாக செய்தியாளர் கேள்வி எழுப்பினர்.
இதனைக் கேட்டு கோபமான தமிழிசை, “சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் குற்றமே நடக்கவில்லையா?, இதை ஒரு குற்றமாகவே அவர் நினைக்கவில்லையா?, பாதுகாப்பு என நினைக்கிறாரா? இல்லை பாதுகாப்பாக பாலியல் குற்றம் நடந்ததாக நினைக்கிறாரா?. அவர் பேசி இருப்பது கடுமையான வார்த்தைகள் என்றார். தமிழ்நாடு முழுவதுமே பாலியல் வன்கொடுமை குற்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நெல்லை, தருமபுரி, வேலூர் என திரும்பிய திசையெல்லாம் பாலியல் வன்கொடுமை அரங்கேறி வருகிறது. தமிழ்நாட்டில் எந்த மாவட்டமுமே பெண்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை என்றார்.
அதேபோல் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இது ஒரு தனிப்பட்ட நிகழ்வு, இதை ஏன் அரசியலாக்குகிறீர்கள்? என பேசியிருப்பது ஏற்புடையதல்ல. பெண்கள் மீது அக்கறை இல்லாத அரசு இது என கடுமையாக விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர் இன்று அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைதாகியுள்ள ஞானசேகரனை திமுக அனுதாபி எனக்கூறியுள்ளார், விரைவில் அவர் திமுக தொண்டர் என்ற உண்மையும் வெளியே வரும் என்றார்.
இதையும் படிங்க: காங்கிரசுக்கு 'ஷாக்' : பா.ஜ.க. கூட்டணியில் இணையும் சரத் பவார் கட்சி; மகளுக்கு மத்திய அமைச்சர் பதவி: பரபரக்கும் 'மகாராஷ்டிரா அரசியல்'