×
 

திருமணம் மூலம் இந்தியாவுக்குள் வந்த 5 லட்சம் பாக். பெண்கள்.. பாஜக எம்.பி. வெளியிட்ட திடுக் தகவல்.!

பாகிஸ்​தானை சேர்ந்த 5 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட பெண்​கள், திரு​மணத்​தின் மூலம் இந்தியா​வுக்​குள் வந்​துள்​ளனர் என்று பாஜக எம்​.பி. நிஷி​காந்த் துபே விமர்​சித்​துள்​ளார்.

பாகிஸ்​தானை சேர்ந்த 5 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட பெண்​கள், திரு​மணத்​தின் மூலம் இந்​தி​யா​வுக்​குள் வந்​துள்​ளனர் என்று பாஜக எம்​.பி. நிஷி​காந்த் துபே விமர்​சித்​துள்​ளார்.

ஏப்ரல் 22இல் ஜம்மு காஷ்மீரின் பைசரன் பள்ளத்தாக்கில் பஹல்காமில் பாகிஸ்தானோடு தொடர்புடைய தீவிரவாதிகள் ராணுவ உடையில் வந்து நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலோனர் சுற்றுலாப் பயணிகள் ஆவர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, அட்டாரி - வாஹா எல்லை மூடல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தது.

மேலும் இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்களின் விசாக்களை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது. இந்தியர்களை திருமணம் செய்த பாகிஸ்தானியர்களும் அனுப்பபடுகின்றனர். ஆனால், பல இடங்களில் அவர்கள் வெளியேற மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இந்​நிலை​யில், தீவிர​வாதத்​தின் புது​முக​மாக திரு​மணம் இருக்​கிறது என்று பாஜக எம்​.பி. நிஷி​காந்த் துபே விமர்​சனம் செய்​துள்​ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் பக்​கத்​தில் நிஷி​காந்த் பதிவிட்டுள்ளார். அதில், ‘‘திரு​மணத்​தின் மூலம் மட்​டும் 5 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட பாகிஸ்​தான் பெண்​கள் இந்​தி​யா​வுக்​குள் வந்​துள்​ளனர். அவர்​களுக்கு இன்​னும் இந்​திய குடி​யுரிமை வழங்​கப்​பட​வில்​லை. இது​போல் திரு​மணம் மூலம் இந்​தி​யா​வுக்​குள் வரும் பாகிஸ்​தான் பெண்​களின் எண்​ணிக்கை அதி​கரிப்​பது, தீவிர​வாதத்​தின் புது​முக​மாக தெரி​கிறது. இதை எதிர்த்து நாம் எப்​படி போராட போகிறோம். இந்த விஷ​யம் மிக​வும் கவலை அளிக்​கிறது’’ என்று நிஷிகாந்த் துபே விமர்​சனம் செய்துள்ளார்.

இதையும் படிங்க: கெடு முடிந்தும் செல்லாத பாகிஸ்தானியர்களுக்கு சிறை தண்டனை..அதிரடி முடிவுக்கு தயாராகும் அரசு?



இந்​நிலை​யில், அட்​டாரி எல்​லை​யில் இந்​திய அதிகாரி அருண்​பால் கூறுகையில், "பாகிஸ்​தானியர்​களுக்கு வழங்​கப்​பட்ட தூதரக, நீண்ட கால, அலு​வல் ரீதியி​லான விசாக்​களை தவிர்த்து மற்ற சிறப்பு விசாக்​கள், குறுகிய கால விசாக்​கள் அனைத்​தும் ஏப்ரல் 27ஆம் தேதியே ரத்தாகிவிட்டது. அதன்​பின் கடந்த 3 நாட்​களில் இந்​தி​யா​வில் இருந்து 537 பாகிஸ்​தானியர்​கள் வெளி​யேறி உள்​ளனர். அதே நேரத்தில் பாகிஸ்​தானில் இருந்து இந்​தி​யர்​கள் 850 பேர் நாடு திரும்பி உள்​ளனர்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: சிகிச்சைக்காக 2 குழந்தைகளுடன் இந்தியா வந்த பாகிஸ்தானியர்.. இக்கட்டான சூழலால் பரிதவிக்கும் தந்தை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share