×
 

மத்திய அமைச்சர் எல்.முருகன் தடுத்துநிறுத்தப்பட்ட விவகாரம்.. தமிழக டிஜிபிக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம்..

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு செல்ல முயன்ற மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அங்குள்ள காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் குறித்து அண்ணாமலை கடிதம் எழுதி உள்ளார்.

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு செல்ல முயன்ற மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அங்குள்ள காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் அதிகார துஷ்பிரயோகம் என்று தமிழக டிஜிபிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், கடந்த 17-ந் தேதி மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயில் மற்றும் காசி விசுவநாதர் கோயிலுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.

இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு முன்கூட்டிய பயண நிகழ்ச்சி நிரலும் அனுப்பப்பட்டுள்ளது. அப்படி இருந்தும், மலையடிவாரத்தில் சுப்ரமணிய சுவாமி கோயில் சன்னநிதிக்கு முன்பாக அங்குள்ள காவலர்களால் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவிக்கவே, சிறிய வாக்குவாதத்திற்கு பிறகு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: துருப்பிடித்த இரும்பு கை...முதலமைச்சரை துணை நடிகராக சொல்லுங்க...! அலறிய அண்ணாமலை!

ஒரு மத்திய இணை அமைச்சரை, பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் தடுத்து நிறுத்தியது மிகுந்த மனவருத்தத்தை அளிப்பதாக அந்த கடிதத்தில் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். கோயிலுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதா என அவர் கேள்வி எழுப்பியபோது, அவரை தடுத்து நிறுத்தும்படி மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்ததாக பணியில் இருந்தவர்கள் கூறியிருப்பது கூடுதல் வருத்தத்தை அளிப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், மத்திய இணை அமைச்சர் அவரது வழிபாட்டு உரிமை பறிக்கப்பட்டுள்ளதன் மூலம் காவல்துறையினர் தங்களுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி உள்ளனர்.  முன்னெப்போதைவிடவும் பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவும் நிலையில், இந்த சம்பவம் அவர்களிடையே கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாக அண்ணாமலை சுட்டிக்காட்டி உள்ளார். மத்திய இணை அமைச்சர் ஒருவரே இப்படி அவமானப்படுத்தப்பட்டால், தமிழ்நாட்டில் சாதாரண மக்களின் நிலை என்ன? என்று அந்த கடிதத்தில் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
 

இதையும் படிங்க: தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கிய ரூ.1,050 கோடி எங்கே?.. அமைச்சர் அன்பில் மகேசுக்கு அண்ணாமலை கேள்வி..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share